இறைவனால் சவுதி அரேபியா பழிவாங்கப்படும் - அயதுல்லா அலி காமேனி
சவுதி அரேபியாவின் நடவடிக்கையால் மதத்தின் பெயராலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
சவுதி அரேபியாவில் ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர்-அல்-நிமர் உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றியது.
சவுதி அரேபிய அரசுக்கு எதிரான சிறுபான்மை ஷியா பிரிவினரின் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய நிமர் அல் நிமர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தி, மரண தண்டனை விதித்து நிறைவேற்றி இருப்பது, உலகமெங்கும் உள்ள ஷியா பிரிவினருக்கு ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஷியா பிரிவினரை பெரும்பான்மையாக கொண்டுள்ள ஈரானும், ஈராக்கும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
ஈரானின் 2-வது பெரிய நகரமான மஷாத் நகரிலும் சவுதி அரேபிய துணைத்தூதரகத்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதற்கிடையே நிமர் அல் நிமரின் மரண தண்டனையால், சவுதி அரேபியா இறைவனால் பழிவாங்கப்படும் என ஈரான் மதத்தலைவர் அயதுல்லா அலி காமேனி எச்சரித்துள்ளார். கண்டனத்தை பதிவு செய்வதற்காக டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதருக்கு ஈரான் அரசு அழைப்பு விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உங்க நாட்டில் எத்தனை சன்னிதலைவர்கலுக்கு தன்டனையளீத்தீர்கள் அதற்கும் இதே அல்லாஹ்தானே கூழிவழங்கவேன்டும் ஆக உங்க வேன்டுதலையும் பொருத்திருந்து பார்ப்போம் வாக்குமீரியகூட்டம் யார் என்பது அந்த அல்லாஹ்வே நங்கரிந்தவன்
ReplyDeleteI agree with you
DeleteWrong Thinking...
ReplyDeleteAllah wanted us to follow TAWHEED so he will support KSA which support TAWHEED ( worshipping Allah alone )
BUT
Allah will not support SHIRK. Grave worshpping is against to TAWHEED
So how come Allah destroy a people who follow TAHEED. Rather the punishement of Allah will come down to people of GRAVE WORshippers who commit SHIRK.