பௌத்த பிக்குகளை வழிநடத்த, சட்டம் இயற்றுவது நகைப்பிற்குரியதாகும்
நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாது பௌத்த பிக்குகளுக்காக சட்டம் போடுவது நகைப்பிற்குரியது என கொழும்பு 7, தர்ம நிறுவனத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டங்களை உரிய முறையில் நிறுவாது, பௌத்த பிக்குகளை வழிநடத்த சட்டம் இயற்றுவது நகைப்பிற்குரியதாகும்.
அரசாங்கம் எவ்வாறான சட்டங்களை கொண்டு வந்தாலும், மூன்று பீடங்களினதும் தலைவர்களினதும் சங்க சபையினதும் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தரப்பினரும் சட்டத்தை மீறிச் செயற்படுகின்ற நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
மஹா சங்கத்தினருக்கு துன்புறுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் இந்த சட்டம் அமுல்படுத்தப்படலாம்.
போலி நோக்கங்களின் அடிப்படையில் செயற்படும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தபடுவதற்கு நான் தடை போடவில்லை.
எனினும், கஸ்டப் பிரதேச கிராமங்களில் மக்களுக்காக ஜோதிடக் கணிப்புக்களை மேற்கொள்ளும் பௌத்த பிக்குகளுக்கு அதற்கான சந்தர்ப்பம் இருக்க வேண்டுமென எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் ஜோதிடம் பார்க்க தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Hi Gunawansa thero. As long as you people behave like monks as we had about 15-20 years ago, you will have respect from all sides. Now these tugs theros making your position a question mark? Please go back to old traditional theros. Then, we do not have to have rules to monitor you guys.
ReplyDeleteஇச்சட்டத்தில் அவதானிக்க வேண்டியவைகள்..
ReplyDelete1. பெளத்தத்துக்கு முன்னுரிமை வழங்கிய 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தின் ஓர் நீட்சி. நமக்கு முள்ளைக்காட்டி அவர்களுக்கு பலாப்பழம் வழங்கப்படுகிறது. உரிக்கும் வரைக்கும்தான் அவர்களுக்கு கஷ்டமும் நமக்கு பாதுகாப்பும்.
2. நாளை பெளத்தம் தவிர்ந்த ஏனைய மதங்களுக்கும் அரசு சட்டமியற்ற முற்படும். இது அரசியலமைப்பில் வழங்கப்படுள்ள மத சுதந்திரம் மற்றும் தனிநபர் சுத்தந்திரத்தை பாதிக்கும். மேலும் ஒவ்வோர் மதத்திலும் ஏராளம் பிரிவுகள். இதில் அரசுடன் சார்ந்துள்ள பிரிவினரின் வழிநடத்தலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப சட்டங்கள் கொண்டுவரப்படும்.
3. மதம் தொடர்பான சட்டங்கள் சட்டங்கள் அம்மதம் தொடர்பான உயர்பீடங்களினால் உருவாக்கப்படவேண்டும். இவ்விதம் உருவாக்கப்படும் சட்டங்கள் நாட்டிலுள்ள ஏனைய மதங்களின் சுதந்திரத்தை பறிக்காமலும் நாட்டின் சட்டம், ஒழுங்கை பாதிக்காமலும் இருப்பதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
4. முஸ்லிம் குவாசி நீதிமன்றம், இணக்க சபைகள்(conciliation board) வ்மூலம் வழங்கப்படு தீர்ப்புக்களை மீறுவோர்க்கு நேரடியாக தண்டனை வழங்க முடியாது ஏனெனில் அவற்றுக்கு நீதிமன்றின் அந்தஸ்து வழங்கப்படவில்லை. அவ்விதம் மீறுவோர்க்கு நீதவான்/மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அவற்றாலேயே தண்டனை வழங்கப்படலாம். ஆனால் இங்கு இச்சட்டத்தின் மூலம் பிக்குகள் நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட முடியும். எனவே பிக்குகள் நீதிமன்றத்திற்கு நீதிமன்றத்தின் அந்தஸ்து வழங்கப்பட்டு இலங்கை நீதிமன்ற பதவனிக்குள் புகுத்தப்படுகின்றது. அவற்றின் நியாயாதிக்கம் எதிர்காலங்களில் விரிவடையும். (ஞானசார தேரரின் தனியான பிக்குகள் நீதிமன்றம் வேண்டும் கோரிக்கை தோழர்களுக்கு ஞாபகமிருக்கும்)
5.பெளத்த பிக்குகளின் வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும். அதேநேரம் பெளத்த பிக்குகள் தொடர்புபடும் பட்சத்தில் வழக்காளி அல்லது எதிராளி சாதாரண பெளத்த குடிமக்களாகவோ அல்லது ஏனைய மதங்களை சேர்ந்த்தவர்களாகவோ இருப்பினும் இந்நீதிமன்றிலேயே விசாரிக்கப்படுவர்.
எனவே ஈற்றில் இச்சட்டம் பெளத்த பிக்குகளின் அடாவடித்தனங்களை கட்டுப்படுத்துவது எப்படிப்போயினும் கட்டவிழ்த்து விடும். கண்டிப்பாக நம்மை மாடு குத்துவது உறுதி.
கோயில் மணியடித்தாலும், மசூதி பாங்கொலித்தாலும், சர்ச் மணியடித்தாலும் பெளத்தம் நசுக்கப்ப்டுகிறது என்று வழக்கில் போய் நிற்கும்.
பிக்குகளை கட்டுப்படுத்தும் நெருப்பென வெளிவரும் இச்சட்டம் விகரைகளுக்கு விளக்காகவும் இன மத பேதமின்றி நம் வீடுகளுக்கு அழிவாகவும் தெரிகிறது.