சவூதி அரேபியாவுக்கு ஆதரவாக, தய்யிப் எர்துகான்
ஈரானுடனான மோதலில் சவூதி அரேபியாவுக்கு ஆதரவாக மேலும் ஒரு நாடாக கட்டாரும் டெஹ்ரானில் இருக்கும் தூதுவரை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. ஈரானின் சவூதி தூதரகத்தின் மீது கடந்த வாரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையிலேயே கட்டார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஜோர்தான், டிஜிபுடி மற்றும் துருக்கி நாடுகளும் சவூதி ஆதரவான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளன. சுன்னி மன்னர் ஆட்சி நீடிக்கும் சவூதியில் ஷியா மதத்தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையிலேயே சவூதி தூதரகம் தாக்கப்பட்டது.
தீவிரவாத குற்றச்சாட்டில் சவூதி 47 பேர் மீது மரண தண்டனை நிறைவேற்றியது, அதன் உள்நாட்டு விவகாரம் என்று துருக்கி ஜனாதிபதி தய்யிப் எர்துகான் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஒருவரான ஷியா மதத்தலைவர் நிம்ர் அல் நிம்ரின் மரணம் பிராந்தியம் எங்கும் மதப்பிரிவினை பதற்றத்தை அதிகரித்துள்ளது.
“மரண தண்டனைக்கு உள்ளான 46 பேர் சுன்னிக்கள். அவர்கள் அல் கொய்தாவுடன் தொடர்புபட்டவர்கள் என்பதாலேயே மரண தண்டனைக்கு முகம்கொடுத்தார்கள். அவர்களில் ஒருவர் ஷியா மதத்தலைவர். இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டது. சவூதி அரேபியா அதனை நடைமுறைப்படுத்தியது. அது அவர்களது முடிவு” என்று தலைநகர் அங்காராவில் புதனன்று இடம்பெற்ற உரையொன்றில் எர்துகான் குறிப்பிட்டார்.
சிரியாவில் சிவில் யுத்தத்தில் கொல்லப்படுபவர்கள் பற்றி தொடர்ந்து அமைதிகாப்பவர்கள் சவூதி அரேபியாவில் ஒருவர் கொல்லப்பட்டதற்காக ஆரவாரப்படுகிறார்கள் என்றும் எர்துகான் குறிப்பிட்டார். இதில் அவர் ஈரானையே மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
எர்துகான் மேலும் குறிப்பிடும்போது, “நீங்கள் (சிரிய அரசுக்கு) மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதரவளிக்கின்றீர்கள். நீங்கள் கொலைகார (பஷர் அல்) அஸாத்திற்கு பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்குகின்றீர்கள். (ஈரானில் இருக்கும்) சவூதி அரேபிய தூதரகம் ரொக்கெட் லோஞ்சர்களால் தாக்குப்பட்டது. அதன் ஈராக் தூதரகமும் சேதமாக்கப்பட்டது. சர்வதேச உறவில் இவைகள் ஏற்க முடியாத செயலாகும்” என்றார்.
மறுபுறும் சவூதி தூதரகத்தை தாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி அழுத்தம் கொடுத்துள்ளார். எனினும் உறவுகளை துண்டித்தும் ஏனைய நடவடிக்கைகள் மூலமும் சவூதி மதத்தலைவர் ஒருவரை தலையை துண்டித்து கொலை செய்த குற்றத்தை மறைக்கப்பார்ப்பதாக ரவ்ஹானி முன்னதாக விமர்சித்திருந்தார்.
சவூதி தூதரகம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிய ஆபிரிக்க நாடான டிஜிபுடியும் ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ளது. ஏற்கனவே ஷியா முஸ்லிம் நாடான ஈரானுடன் சவூதிய அரேபியா, பஹ்ரை மற்றும் சூடான் இராஜதந்திர உறவுகளை முழுமையாக துண்டித்துக் கொண்டுள்ளது.
“சவூதி அரேபியாவின் ஒருமைப்பாட்டுக்கு அதரவளிக்கும் வகையில் ஈரானுடனான இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்படும்” என்று டிஜிபுடி வெளியுறவு அமைச்சர் அலி யூசுப் ராய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டார்.
மறுபுறம் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைட்டுக்கு அடுத்து கட்டாரும் தனது ஈரானுக்கான தூதுவரை திரும்ப அழைத்துள்ளது. அதேபோன்று ஜோர்தான் தனது நாட்டுக்கான ஈரானிய தூதுவரை அழைத்து சவூதி தூதரகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளது. ஈரான் அரபு விவகாரத்தில் தலையிடுவதாகவும் குற்றம்சாட்டியதாக ஜோர்தான் அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment