இந்தமாதம் இலங்கைக்கு வரும், முக்கிய பிரபலங்கள்
2016ம் ஆண்டு மலர்ந்துள்ள நிலையில், புத்தாண்டின் ஜனவரி மாதத்திற்குள் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை (04ம் திகதி) பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அழைப்பை ஏற்று பாக்கிஸ்தான் பிரதமர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர், செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளார்.
இதன்போது பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை இருநாடுகளுக்கிடையில் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாசார ஒத்துழைப்புகள் குறித்தும் இருநாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.
நவாஸ் ஷெரீப்பின் பயணத்தின் பின்னர் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜி பிரண்டே ஆகியோரும் ஜனவரி மாதத்தின் இறுதிக்குள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

According to Transparency International 2013, 76% Pakistanis
ReplyDeletebelieve that their political parties are corrupt , 63% believe
the parliament is corrupt and 81% Pakistanis believe their
public officials and civil servants are corrupt. We are far
better in the index . Are we going to learn from Pakistan how
to improve our performances ?