Header Ads



சிறுநீரக மோசடி விசாரணைகளை ஆரம்பிக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை

சிறுநீரக மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு, மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜீ.மஹிபாலவின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 comment:

  1. நாட்டில் உள்ள தனியார் வைத்தியசாலைகளையும், லீசிங் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த போதியளவு சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இவ்வைத்தியசாலைகள் உலக மாபியாக்களுடன் நெருங்கிய தொடர்புடையவை. திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தொடர்களை எந்த அடையாளமும் இல்லாமல் செய்து முடிக்கின்றன.

    ReplyDelete

Powered by Blogger.