கல்முனை ஸாஹிறாவில், வியாழக்கிழமை மாபெரும் சிரமதானப் பணி
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 07.01.2016 அன்று வியாழக்கிழமை, கல்முனை ஸாஹிறாவில் மாபெரும் சிரமதான நிகழவொன்றினை நடாத்துவதற்கு கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இடம்பெற ஏற்பாடு செய்யபட்டுள்ள இந் நிகழ்வானது, "2016 இல் சுத்தமான பாடசாலையும், ஆரோக்கியமான மாணவர்களும்" எனும் தொனிப்பொருளை மையமாகக் கொண்டிருக்கும்.
கல்முனை பிராந்திய சுகாதார திணைக்களம், கல்முனை மாநகர சபை, காரைதீவு ராணுவ படை முகாம், கல்முனை பொலிசார், மற்றும் சாய்ந்தமருது கல்முனை பிரதேச செயலகங்கள் ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்புடன் நடைபெற உள்ள இச்சிரமதான நிகழ்வில், கல்முனை பிரதேசத்தில் இருக்கும் அனைத்து விளையாட்டு கழகங்கள், சமூக சேவை அமைப்புகள், இளைஞர் கழகங்கள் உட்பட அனைத்து மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு கல்லூரியின் மேம்பாட்டிற்காயும், எமது எதிர்கால சந்ததியினரின் நலனிற்காயும் தங்களை அர்ப்பணிக்குமாறு, நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுக்கிறது.
தில்ஷான் நிஷாம்
நல்ல விடயம். ஆனால் சுத்தமான பாடசாலைகளும் என்பதை சுத்தமான சூழலும் ஆரோக்கியமான மாணவர்களும் என்ற தொனிப்பொருளில் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இவ்வாறு எல்லா பாடசாலைகளும் மாணவர்களுக்கு இத்தகைய நல்ல விடயங்களை செய்ய ஊக்கமளித்தாள் சுயநலமற்ற சமூகத்தை உருவாக்க முடியும். In sha Allah.
ReplyDelete