சிங்கள இரத்தம் பரவுகிறது - அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறதா..??
இலங்கையின் தலைநகரில் அண்மைய நாட்களாக உருவெடுத்திருக்கும் சிங்க லே என்ற இனவாத அமைப்பின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விசனங்களை பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தினர் முன் வைத்திருக்கின்றனர். தமக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலை ஒழிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்னர்.
சிங்க லே - சிங்கள இரத்தம் என்ற இனவாதத்தை தூண்டும் சிந்தனை கொண்ட அமைப்பு முதலில் தமது இலச்சினையை வாகனங்களிலும் ரீசேட்டுக்களிலும் பொறித்து வந்த நிலையில் தற்போது முஸ்லீம் மக்கள் வாழக்கூடிய பகுதிகளிலும் சென்று வீட்டு கதவுகளில் தமது இலச்சினையை பதித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களின் முன்னர் வெல்லம்பிட்டி பொல்வத்தை பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது சிங்க லே கோசத்துடன் வந்தவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த மூன்றுபேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு ஆறு காடையர்கள் சிங்க லே! சிங்க லே!! என கோசம் எழுப்பிடியடி அப்பாவி முஸ்லீம் மக்கள்மீது தாக்கிய சம்பவம் குறித்து வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் ஸ்ரிக்கரில் தொடங்கிய சிங்க லே இப்போது கைகளை நீட்டத் தொடங்கிவிட்டது.
ஆனால் இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கம் சார்பில் சிலர் கண்டனங்களை வெளியிட்டுள்ளனரே தவிர இதனை தடுத்து நிறுத்த அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காவல்துறையில் முறைப்பாடு செய்தாலும் இது அரசியலுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சிங்க லே அமைப்பினர் இனக்கலவரங்களை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்ற அச்சம் தலைநகர் சிறுபான்மை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனை நீக்கும் வகையில் நல்லாட்சி அரசு சிங்க லே இனவாத அமைப்பை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுபான்மை மக்கள் புதிய அரசை நோக்கி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
Post a Comment