மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர், யோஷித சற்றுமுன் கைது
பொலிஸ் நிதிக்குற்றப்பிரிவினால் விசாரணைக்குற்படுத்தப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
கை செய்யப்பட்ட அவர் கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் அக்ரம் அளவி தெரிவித்துள்ளார்.
முன்னதாக யோசித உள்ளிட்ட ஐந்து பேர் இன்று FCID யில் வாக்குமூலம் வழங்க சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
கவிஷான் திசாநாயக்க
ரோஹான் வல்விட்ட
நிஷாந்த ரணதுங்க
டாக்டர் பெர்னாண்டோ ஆகியோரே கைதான மற்றவர்கள் என அறிய முடிகிறது.
2
கட்சியில் சரிந்து வரும் தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் யோஷித்த உள்ளிட்டோரை கைது செய்யுமாறு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ஒரே வாகனத்தில் பயணித்தவாறு ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் ஒன்று நெருங்கி வரும் நிலையில் மஹிந்த குடும்பத்தினர் கைது செய்யப்படுவதானது அவர்கள் மீது பொதுமக்களின் அனுதாபம் அதிகரிப்பதற்கு வழியேற்படுத்தி விடும் என்று அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் அரசியல் செயற்பாடுகளில் சிறுபிள்ளைத்தனமாக செயற்படும் ஜனாதிபதி , சந்தர்ப்பமறியாது மஹிந்த குடும்பத்தினரின் கைது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இது சரியான நேரத்தில் சரியாக எடுக்கப்பட்ட முடிவாகவே நாங்கள் கருதுகிறோம். மகிந்த புதிய கட்சி ஆரம்பித்து அதன் தலைமை பதவியை ஏற்றதன் பின் இந்த நடவெடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு வேற அர்த்தம் ( அரசியல் பழிவாங்கள்) கற்பிக்கப்படும். அதே நேரம் மதில் மேல் பூனையாக இருக்கும் இரட்டை வேடம் ( மிகவும் ஆபத்தானவர்கள் ) அரசியல் வாதிகளை ஒரு வழி செய்வதற்கும் நல்ல சந்தர்பம் ஆகும். ராஜபக்ச அன் கோ களின் ஊழல், அதிகார துஸ்பிரயோகம், கொலைகள், பணமோசடிகள்... வெளிக் கொணர்வதற்கான மிகச் சிறந்த நேரமாகவே இதை கருதுகிறோம். அவரது அதி தீவிர ஆதரவாளர்கள் எப்போதும் அவர் பக்கமே இருப்பார்கள். அந்த ஆதரவாளர்களின் துள்ளல்களும் அட்டகாசமும் அட்டக்கி வாசிக்கப்படும் என்பது எமது கணிப்பாகும்.
ReplyDelete