Header Ads



முஸ்லிம் அமைப்புக்களை, இலங்கை அரசு உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் - ரொஹான் குணரட்ன

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மாதம் இரண்டு இலங்கையர்களை அமைப்பில் இணைத்துக் கொள்கின்றார்கள் என அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சர்வதேச மையத்தின் தலைவர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 50 இலங்கையர்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்வதற்காக வெளிநாடு செல்வது அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை எனவும் பயங்கரவாத கொள்கைகள் இலங்கைக்குள் வியாபிக்கக் கூடிய அபாயத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கை ஐ.எஸ். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் முன்னணி வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் இளைஞர்களுடன் நெருங்கிச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் அனைத்து முஸ்லிம் அமைப்புக்களையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

9 comments:

  1. நீ ஒரு பொய்யன், கேனக் கிறுக்கன். உனக்கு பேராசிரியர்? பட்டம் வேறு.

    ReplyDelete
    Replies
    1. அடிரா சக்கே

      Delete
  2. முதலில் சிங்கரத்த என்ன செய்ய போகிராய் ஒரு நாள் நாட்டுக்கு எரிப்பார்கள்

    ReplyDelete
  3. He is a highly reputable professor in terrorism related affairs.....He worked in National University of Singapore...well said Rohan

    ReplyDelete
  4. நாடு நிலையாக சிந்திக்க முடியாதவனல்லாம் இலங்கையின் முக்கிய மான ராரதந்திர பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  5. முன்னர் இவர் தமிழ் சைவ,கிருஸ்தவர்களுக்கு எதிராக விமர்சித்தபொழுது மௌனித்திருந்தீர்கள் அரச அடக்குமுறைக்கு எதிராக ஜனாவில் நாம் திரண்ட பொழுது எம்மை விமர்சித்தீர்கள் எப்பொழுது நாம் தமிழர் என மொழியால் ஒன்றுபடப்போகிறோம்?

    ReplyDelete
  6. இலங்கையில் இஸ்லாமிய கிலாபத், ஜிஹாத், அல்லாஹ்வின் சட்டம் என்று மாணவர்களை மூளை சலவை செய்யும் இஸ்லாமிய அமைப்புகள் இருப்பது குறித்து முஸ்லிம்களே கவனமாக இருக்க வேண்டும். இவற்றின் முடிவு இசிஸ் ஆக மாறலாம்.

    ReplyDelete
  7. Varan athai LTTE muslimkalai adithu veratta mun yosithirukka vendum.
    No matter what, We Muslims know that no one will support us.

    ReplyDelete
  8. திரு வரன்,

    தமிழை பேசுவதனால் "தமிழர்" என்றுதான் கருதவேண்டும், அதன்மூலம் ஒற்றுமைப்படவேண்டும் என்று "சிந்திப்பதை"விட, "தாயும் மகளும் என்றாலும் வாயும் வயிறும் வேறு" என்று, அதே "தமிழின்" பழமொழி சொன்னதுபோல்
    அவரர் தனித்துவத்தை பேணிக்கொண்டும், மதித்துக்கொண்டும், "தங்களுக்கு மட்டுமே எல்லாம் வேண்டும், தாங்கள் மட்டுமே அனுபவிக்கவும் வேண்டும், ஆளவும் வேண்டும்" என்றில்லாமல், விட்டுக்கொடுத்து, பகிர்ந்துண்டு ஒற்றுமையாக வாழ்வோமே! அதைப்பற்றி சிந்திப்போமே! குறிப்பாக அரியநேத்திரன், பொன்செல்வராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கருணா அம்மான், பிள்ளையான் போன்ற தமிழ் மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கும், சில அரச அதிகாரிகளுக்கும் சொல்லிவைங்களேன்!

    ReplyDelete

Powered by Blogger.