மன்னிப்பு கோரிய சங்கக்கார, மீண்டும் மிரட்டுவார் என்கிறார் பயிற்சியாளர்
பிக் பாஷ் லீக் டி20 தொடரின் ஹோ பார்ட் ஹுரிகேன்ஸ் அணியில் சிறப்பாக விளையாட முடியாமல் போனதற்கு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அந்த அணியின் வீரருமான குமார் சங்கக்கார மன்னிப்பு கோரியுள்ளார்.
இவர் அவுஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹோபார்ட் ஹுரிகேன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இதில் 8 போட்டிகளில் விளையாடிய சங்கக்காரவினால் 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. அடிலெய்டு ஸ்டைக்கர்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கூட 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் அணிக்கு சிறந்த பங்களிப்பு அளிக்க முடியாமல் போனதற்கு சங்கக்கார சக வீரர்களிடம் மன்னிப்பு கோரியதாக அவ்வணியின் பயிற்றுநர் டெமின் ரைட் தெரிவித்துள்ளார்.
மேலும், சங்கக்கார பழைய நிலைக்கு மீண்டும் திரும்பி வருவார் எனவும், அடுத்த சீசனில் அதிரடியில் அவர் மிரட்டுவார் என்றும் டெமின் ரைட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வியாட்டில் மிரட்டுவாரா பணத்த மாத்திரம் திரட்டுவாரா
ReplyDelete