Header Ads



பௌத்தர், தமிழர், முஸ்லிம்களில் முட்டாள்கள் உள்ளனர் - சந்திரிக்கா (வீடியோ)

முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க  இன்று நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்.

தைப்பொங்கலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொங்கல் விழா,  நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில்  நடைபெற்றது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததாவது;

எமது நாட்டில் முட்டாள் சிங்கள பௌத்தர்கள் இருக்கின்றனர். முட்டாள் முஸ்லிம்களும் இருக்கின்றனர். முட்டாள் தமிழர்களும் இருக்கின்றனர். மன்னிக்கவும், அறிவிலியாக செயற்படுவதை நாம் நிறுத்த வேண்டும். எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வோம். எமது தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்வோம். ஏனையவர்களின் தனித்துவத்திற்கும் மதிப்பளிப்போம். அந்தத் தனித்துவங்களும் மேம்பட இடமளிப்போம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் தேசமாக நாம் பயணிக்க வேண்டும். 

3 comments:

  1. NEENGALUM PERIYA MUTTAL MAHINDAWAUKKU MUNBU UZAVIYAZU

    ReplyDelete
  2. உன்மைதான் நாட்டில் எதிர்க்கட்சி ஆளும்கட்சி இருப்பது போன்று இனங்களுக்கிடையிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இல்லாவிட்டால் உலகம் இருந்திருக்காது நாட்டை நேர்வழிப்படுத்த அரசியல் இருப்பதுபோல் மக்களை நேர்வழிப்படுத்த மதத்தலைவர்கள் இருக்கின்றார்கள் ஆனால் எது இருந்தும் திருந்துவதற்கு சமூகம் நினைக்கவேண்டும் உங்கள் பேச்சும் அவ்வாறானவர்களூக்கு ஒரு சாட்டை அடியாக இருக்கட்டும்

    ReplyDelete
  3. எல்லோரும் புத்திசாலியாக இருந்தா நம்மட நாடு தாங்காது.

    ReplyDelete

Powered by Blogger.