அரசியல் நிறுவனங்களில் பெண்களை தைரியமாக பேச, வழிவகை செய்ய வேண்டும் - ஹக்கீம்
இன்றைய நவீன உலகில் பெண்கள் சகல துறைகளிலும் முன்னேறிச் செல்கின்றார்கள். அவர்களின் துறை சார்ந்த ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கின்றது. இந்தவகையில், அரசியலிலும் பெண்களின் ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நகரதிட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புக் காரியாலயம் அண்மையில் அக்கரைப்பற்றில் திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது,
வெறுமனே தேர்தல் காலத்தில் வாக்களிக்கும் இயந்திரங்களாக மாத்திரம் பெண்களை பயன்படுத்திய காலம் மாறி, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 25 சதவீதம் பெண்களுக்கு ஓதுக்கீடு வழங்க வேண்டும். அதுவும் போட்டியிடுவதற்கல்ல. அவர்களுக்கு தேசியப்பட்டியல் மூலம் வெகுமதியான ஆசனங்களை கட்சியினால் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது. கட்சி ரீதியாக மாதர் அணியொன்றை உருவாக்குவதங்காகவே இக் கூட்டத்தை கூட்டியுள்ளோம்.
பெண்களை அரசியல் நிறுவனங்களில் தைரியமாக பேசுவதற்கு நாங்கள் வழிவகைகளை செய்துகொடுக்க வேண்டும். அக்கரைப்பற்று பெண்களுக்கு பேசப் படிக்க கற்றுக் கொடுக்க வேண்டுமென்று யாரும் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கு மத்தியில் இப்படியான சந்திப்புக்களை ஏற்படுத்தியமை ஏனெனில், நீங்களாக சில சுயமுயற்சிகளை முன்வந்து செய்வதற்கு ஊக்கம் தருவதற்கே.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக உங்கள் ஊரில் மாதர் காங்கிரஸ் ஒன்றை அமைத்து சுயதொழிலிற்கான வட்டியில்லா கடன் உதவியை வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளோம். இதற்காக நீங்களாகவே முன்வந்து ஒரு நிறுவனத்தை அமைத்து செயற்பட தொடங்குங்கள். நிதி சார்ந்த உதவிகளை நாங்கள் மேற்கொள்வோம். பெண்களாகிய நீங்கள் ஒன்றிணைந்து உங்களது திறமையையும் ஆற்றலையும் வைத்து சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்காகவோ செய்துவரும் சுயதொழிலை விருத்தி செய்துகொள்வதற்காகவோ வேண்டிய நிதி உதவியை நாம் வழங்குவோம். இருப்பினும் நீங்கள் அதற்குரிய ஆரம்ப கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வரவேண்டும்.
இக்பால் ஜெம்சாத்
ஆண்கள் சந்திக்கு சந்தி சண்டையிட்டுக் கொள்வது போதாக் குறைக்கு பெண்கள் வந்தால்தான் வீட்டுக்குள் நடக்கும் கறிவேப்பிலை கறிச்சட்டி சண்டை பத்து வருஷங்களுக்கு முன் பளிய மரத்துக்கு கீழே கூடி இருந்து கழுவிய இரகசியம் எல்லாம் சந்திக்கு வந்து நாறி நாற்பது பேப்பர்ல ஏறி சமூகம் நாறும் இது தேவையா?
ReplyDelete