Header Ads



நஜிமுத்தீன் என்ற உயர்ந்த மனிதரின், உன்னத சேவைகள்


(குவைத்திலிருந்து ஜாபிர் மெளலவி  (தீனி) 
(கல்லூரியின் பழைய மாணவனும் முன்னாள்  விரிவுரையாளரும்) 

பாணந்துறை பள்ளிமுல்லையில் அமைந்திருக்கும் மிகப் பிரபலமான அரபுக் கலாசாலை " அல் ஜாமியா அல் அரபிய்யா அத் தீனிய்யா " வின் ஸ்தாபகரும் லுமாலா சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளருமான அல்  ஹாஜ்  நஜிமுத்தீன் அவர்கள் இன்று இறையடி சேர்ந்து விட்டார்கள்

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் பற்றிய சிறு குறிப்பு

 " அத் தீனிய்யா அரபிக் கலாசாலை   " 1960 ஆம் ஆண்டு முதல் பல ஆலிம்களையும் ஹாபிள்களையும் முத்துக்களாக வெளியாக்கி இன்று அவர்கள்  நாட்டின் பல அரபு கலாசாலைகளில் அதிபர்களாகவும்  விரிவுரையாளர்களாகவும் கடமையாற்றி வருவதோடு இன்னும் பலர் பள்ளி வாயல் இமாம்களாக மக்களுக்கு சேவையினை செய்து வருகின்றனர். இக்கலாசாலை ஆரம்பம் முதல் இன்று வரை அதில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எதுவித கட்டணமுமின்றி  இலவச கல்வியையே வழங்கி வருகின்றது

காலஞ்சென்ற அல்  ஹாஜ்  நஜிமுத்தீன் அவர்கள் தனியாக முழு செலவினையும் செய்து பின்னர் அதில் அன்னாரது குடும்பத்தில் பலர் அங்கம் வகித்து அதனை நடத்தி வருகின்றனர். அல்லாஹ்வின் அருளால் இன்று இக்கலாசாலைக்கு வருமானம் தரக் கூடிய அளவு பல கட்டிடங்கள் அல்  ஹாஜ்  நஜிமுத்தீன் அவர்களால் உருவாகப் பட்டுள்ளது இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு
அல் ஹாஜ் நஜிபுத்தீன்
அல் ஹாஜ் மக்கீன்
அல் ஹாஜ் சம்சுத்தீன்
அல் ஹாஜ் முசம்மில்
அல் ஹாஜ் பாக்கீர் 
போன்றவர்களது உழைப்பு மிக முக்கியமானது
 
கல்லூரியின் கல்வி  வளர்ச்சிக்கு உஸ்தாத் ரமலான் ,  உஸ்தாத் தஸ்னீம் அவர்களின் பங்கு அளப் பெரியது என்பது அனைவரும் அறிந்த விடயமே.

அல்  ஹாஜ்  நஜிமுத்தீன் அவர்களின் முயற்சியால் இப்போது இக்கல்லூரி நாட்டின் பல கல்லூரிகளுக்கு  முன்னுதாரணமாக திகழ்கிறது. அத்தோடு இக்கால்லூரியில் தற்போது
1)அல் குரான் மனன பிரிவு
2)கிதாபு பிரிவி
3)இப்தா  பிரிவு
4)ஹதீஸ் கலை பிரிவு
5) ஆய்வுப் பிரிவி
போன்ற அனைத்து கலைகளையும் உள்ளடக்கியுள்ளது

இவ்வனைத்து நன்மையான காரியங்களையும் மக்களின் பிரதி உபாகாரத்தை எதிர்ப்பார்க்காமல் அல்லாஹ் ஒருவனுக்கென்றே செய்து  விட்டு மறைந்து போனார்கள் என்றால் அதுவே உண்மாயனது

யா அல்லாஹ் அன்னாரது உழைப்பை மற்ற செல்வந்தர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் தூண்டு கோலாகவும் அமைத்து அவர்களை சுவர்கத்துக் உரியவராகவும்  மாற்றுவாயக!!!!!  

3 comments:

  1. May Allmighty Allah place him in Jannathul Firthous.

    ReplyDelete
  2. Al haj Najimudeen has left a legacy worthy of rememberance for generations.
    This is the life Allah n Rasul (Sal) expect of us.
    Real living Role model in our hearts.
    Aameen.

    ReplyDelete

Powered by Blogger.