Header Ads



ஞானசார வரவில்லை - நீதிபதி கடும் எச்சரிக்கை

குர்ஆன் அவ­ம­திப்பு வழக்கில் பிர­தி­வா­தி­யான பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லா­ள­ரான கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேற்று (11) நீதி­மன்றில் ஆஜ­ரா­கா­த­தனால் நீதிவான் அவ­ரது சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணி­யிடம் கடும் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

இதன் பிறகு ஞான­சார தேரர் நீதி­மன்றில் ஆஜ­ரா­காது விடின் அவ­ருக்கு எதி­ராக கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனத் தெரி­வித்­த­துடன் இரு சரீரப் பிணை­க­ளுக்­காக தகு­தி­வாய்ந்த இரு­வரை அடுத்த தவ­ணைக்கு அழைத்து வர வேண்டும் என்றும் உத்­த­ர­விட்டார்.

ஞான­சார தேரரின் சார்பில் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி சுதர்­சன குண­ரத்ன ஞான­சார தேரர் நேற்று நீதி­மன்றில் ஆஜ­ரா­கா­மைக்­கான கார­ணங்­களை விளக்­கினார். 

ஜப்­பானில் பௌத்த விகா­ரை­யொன்றின் திறப்பு விழா­வுக்கு அவர் சென்­றி­ருப்­ப­தா­கவும் பெப்­ர­வரி மாதமே இலங்கை திரும்­ப­வுள்­ள­தா­கவும் பெப்­ர­வரி மாதம் அடுத்த விசா­ரணைத் தவ­ணையை குறிக்­கும்­படி நீதி­வானை வேண்டிக் கொண்டார். 

மாதக் கணக்கில் விசா­ரணைத் திக­தியை பின் தள்ள முடி­யா­தெ­னவும் மூன்று வார­ கால அவ­கா­சமே வழங்க முடி­யு­மென்று தெரி­வித்த கொழும்பு நீதிவான் நீதி­மன்ற நீதிபதி பிரி­யந்த லிய­னகே விசா­ர­ணையை பெப்­ர­வரி மாதம் 1 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.

கொழும்பு நிப்போன் ஹோட்­டலில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் பல­வந்­த­மாக பிர­வே­சித்து குழப்பம் விளை­வித்த ஞான­சார தேரர் கொம்­பனித் தெரு பொலிஸ் நிலை­யத்தில் வாக்கு மூல­ம­ளித்து விட்டு வெளியில் வந்து குர்­ஆனை அவ­ம­தித்துப் பேசினார்.

இவ­ருக்கு எதி­ராக மொஹமட் நூர்தீன் தாஜுதீன் என்­ப­வரால் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த விசா­ரணைத் தவ­ணை­யின்­போது நீதி­மன்றில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரி­வினர் ஞான­சார தேர­ருக்கு எதி­ரான குற்றப் பத்­தி­ரி­கையைச் சமர்ப்­பித்­தனர். ஞான­சார தேரர் தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றங்­களை ஏற்றுக் கொள்­ள­வில்லை தான் நிர­ப­ராதி என்றார். இத­னை­ய­டுத்து அவர் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்டார்.

நேற்று நீதி­மன்றில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஒருவர் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். சட்­டமா அதிபர் திணைக்­க­ளமே இந்த வழக்கில் ஆஜ­ராக வேண்டும் எனவும் விசா­ர­ணையில் சில திருத்­தங்­களைச் செய்ய வேண்­டி­யுள்­ள­தா­கவும் அவர் நீதி­ப­தி­யிடம் தெரி­வித்தார். அடுத்த தவ­ணை­யி­லி­ருந்து தாமே ஆஜ­ரா­கு­வ­தா­கவும் கூறினார்.

முறைப்­பாட்­டுக்­காரர் சார்பில் RRT அமைப்பின் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள் சிராஸ் நூர்தீன், மைத்­திரி குண­ரத்ன, சரத் சிறி­வர்­தன ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

ஞான­சார தேரர் தான் நீதிமன்றில் ஒருபோதும் ஆஜராகப் போவதில்லை என ஊடக மாநாடுகளில் தெரிவித்துள்ளார்.

அதனால் நீதிமன்றம் ஞானசார தேரர் மீது சட்டத்தை கடுமையாக அமுல்நடத்த வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் நீதிவானை வேண்டிக் கொண்டார். ARA.Fareel

5 comments:

  1. ஜப்பானில் கக்கூஸ் திரக்க கூட எடுக்க மாட்டார்கள்

    ReplyDelete
  2. இந்த 'அஞ்'ஞானதேரரைத் தண்டிக்க அரசு
    ஏன் இவ்வளவு தயங்குகிறது?

    ReplyDelete
  3. Don't arrest him, he is looking operunity to spark singalish and Muslim problem , don't worry phunisment will come to him in different way, so let this dog bark.

    ReplyDelete
  4. ஜப்பானில் கக்கூஸ் திரக்க கூட எடுக்க மாட்டார்கள்

    ReplyDelete
  5. Court must scrutinize in next trial whether he has valid Japan visa within this period and Japan entry and exit with assistance of immigration

    ReplyDelete

Powered by Blogger.