Header Ads



பௌத்த பிக்குகளை அரசாங்கம் கட்டுப்படுத்தக்கூடாது - மகிந்த போர்க்கொடி


பௌத்த பிக்குகளை சட்டங்களினால் கட்டுப்படுத்துவது கலாச்சாரத்தை பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகள் தொடர்பில் நாடாளுமன்றில் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச சட்ட மூலம், இலங்கையின் கலாச்சார அடையாளங்களுக்கு நேரடியான அடியாக அமையும்.

பௌத்த மதம் நீடித்து நிலைப்பதனை கேள்விக் குறியாக்கும் வகையில் உத்தேச சட்டம் அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் ஒழுக்காற்று சட்டங்களை அமுல்படுத்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

எனினும், அவ்வாறு சட்டங்களை இயற்றக்கூடாது என சில பீடங்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

பௌத்த பிக்குகளை பௌத்த பிக்குகளே கட்டுப்படுத்த வேண்டும்.

பிக்கு ஒருவரின் காவி உடையை களைந்து அவரை பௌத்த பிக்கு அந்தஸ்திலிருந்து நீக்க சட்டத்திற்கு முடியாது.

பண்டைய காலம் முதல் எமது கிராம மக்கள் விஹாரையின் பௌத்த பிக்குவிடம் நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

புத்தாண்டு மலர்வு, ஜாதகம் குறிப்பு போன்றன தொடர்பில் பௌத்த பிக்கு ஒருவரின் உதவியை நாடி மக்கள் தகவல்களை தெரிந்து கொண்டனர்.

இவ்வாறு ஜோதிடம் பார்ப்பதற்கு பௌத்த பிக்குகள் பணம் அறவீடு செய்யவில்லை.

கிராம மக்கள் விரும்பிக் கொடுக்கும் எதனையும் பௌத்த பிக்குகள் ஏற்றுக்கொண்டனர்.

நாட்டுக்கு ஏதேனும் சவால்கள் ஏற்பட்டால் வரலாற்றுக் காலம் முதல் முதலில் முகம் கொடுப்பது பௌத்த பிக்குகளேயாவர்.

எனவே உத்தேச சட்டம் தொடர்பில் மூன்று பீடங்களினதும் பௌத்த பிக்குகள் தீர்மானம் எடுக்க வேண்டுமென மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உத்தேச சட்டம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

8 comments:

  1. Naaida waila mullu maattiruchchu

    ReplyDelete
  2. தனக்கு பிடித்த உணவு காரமாக இருந்தாலும் நல்லதாகவே சொல்லதோனும் பிடிக்காதது நல்லதாக இருந்தாலும் அதுகாரமாக இருக்குது என்ருதான் பழிசொல்லதோனும் அரசியலில் தற்போது உங்கள் நிலை அதுவாகத்தான் இருக்கு என்னசெய்வது.........

    ReplyDelete
  3. ஆமாடா ஆசாமி..., நீயெங்கே அதற்கு சம்மதிக்கப் போகிறாய்...,
    நீயே சகுனம் பார்த்து எல்லாத்தையும் கவுட்டவன் .., இன்னும் அதுவே கதியென அலையும் சந்தர்பம் தேடி....!!

    நீர் கூறுவதும் சதிதான் நாட்டுக்கு ஏதேனும் சவால்கள் வந்தால் ...!! என்று நீர் கூற விளைவதும் ,. அதன் முலமே உன் எதிர்கால சதி அரங்கேற காத்திருப்பதும் எல்லோரும் அறிவாம்

    ReplyDelete
  4. Yes mahinda is taking this matter for his political benefits. But he can not come to the power again

    ReplyDelete
  5. நீங்கள் அவர்களின் முதுகிலேறி ஆட்சிக்கு
    வர நினைப்போ! நடக்காது ஒரு போதும்!

    ReplyDelete
  6. கலாசாரம் ? இப்போது பிக்குகளே கலாசாரம் இழந்து உலக ஆசாபாசங்களில் மூழ்கி , Range Rover , Jeep , ac apartments , buries no, alchohol , women என்று சுத்தித்திரிகிறார்கள்.
    ஒரு பிக்கு என்றால் எல்லாவற்றையும் துறந்து உலக ஆசாபாசங்களில் விழகி இருக்கவேண்டுமென்பதுதான் புத்தரின் போதனை.

    ReplyDelete
  7. பயங்கரவாத பிக்குகள் இயக்கத்தின் தைவர் இவர் அதனால் எவ்வாறு அவரால் இந்த சட்டத்தை நிறைவேற்ற இடமளிக்க முடியும்

    ReplyDelete

Powered by Blogger.