பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் மீது, பாலியல் துன்புறுத்தலா..?
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்றத்தில் வரம்பு மீறி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளுமாறு அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து கட்டளை வெளியாகியுள்ளது.
இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றின் தகவலின் படி வயதான அமைச்சர் ஒருவர் இளம் வயது பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் நடந்து கொள்ளும் விதம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டமைக்கு இணங்கவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தம்மை சந்திக்கும் போதும், நடைக்கூடத்தில் செல்லும்போதும், மதிய உணவுக்காக முதலாம் மாடிக்கு செல்லும்போதும், அவரை கடந்து தமது நாடாளுமன்ற இருக்கைக்கு செல்லும்போதும் குறித்த வயதான அமைச்சர் தம்முடன் கைகுலுக்கிக் கொள்ள முயல்வதாக இளம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் முறையிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் எதிர்க்கட்சிகளின் வயதான நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தம்மிடம் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனங்களில் ஈடுபடுவதாக ஏனைய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று வயதான அமைச்சர் ஒருவர், இளம் பெண் நாடாளுமன்ற உறுப்பினரை கேலி செய்தபோது அந்த பெண் உறுப்பினர் நாடாளுமன்ற நூலகம் அருகில் வைத்து கோபத்தை வெளிக்காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment