கொழும்பு துறைமுக நகர வேலைத்த்திட்டத்திற்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
-எம்.இஸட்.ஷாஜஹான்-
கொழும்பு துறைமுக நகர வேலைத்த்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் பேரணியும் துண்டுப்பிரசுர விநியோகமும்
தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறி கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள துறைமுக நகர வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (17) நீர்கொழும்பு நகரில் பேரணியும் துண்டுப்பிரசு விநியோகமம் இடம்பெற்றது.
மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்து. இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் அருட் தந்தை விக்ரம பொன்சேகா, களனி பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் பிரதிநிதி மடுகல்ல புத்தரத்தித்த தேரர், தென்னே ஞானவங்ச தேரர், களனி மற்றும் பேராதனைப் பல்கலைக்ழக மாணவ பிரதிநிதிகள், மீனவ சங்க பிரிதிநிதிகள் மற்றும் மீனவர்கள் உட்பட பலர் பங்குபற்றினர்.
எதிர்ப்பு நடவடிக்கையில் பங்குபற்றியோர் நீர்கொழும்பு கொத்தலாவல பாலம் அருகில் ஆரம்பித்து பிட்பனை வரையான பிரதேசங்;களுக்கு பேரணியாகச் சென்று கொழும்பு துறைமுக நகர வேலைத்த்திட்டத்தினால் மக்களுக்கும் மீனவர்களுக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் , சூழலுக்கும் எற்படவுள்ள பாதிப்புக்களையும் அபாயங்களையும் விளக்கி உரையாற்றியதுடன், துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
ஆரம்பத்தில் 233 ஹெக்டேயர் பரப்பில் நிர்மாணிக்கப்டவிருந்து துறைமுக நகர வேலைத்திட்டம் தற்போது 269 ஹெக்டேயராக (645ஏக்கர்) அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக பெரும் தொகை இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமான முறையில் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட துறைமுக நகர வேலைகளை சட்ட ரீதியாக மேற்கொள்வதற்காக நல்லாட்சியில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை ஏமாற்றுக் கதை எனவும், இந்த வேலைத்திட்டத்தால் கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் எனவும், மீனவர்கள் இதனால் தமது தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் பேரணியில் ஈடுபட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு தெளிவுபடுத்தினர்.
Post a Comment