Header Ads



துருக்கி ஜனாதிபதிக்கு ஆபாச சைகை காட்டிய பெண், கண்ணீர்விட்டு கதறி அழுதார்

ஆபாச சைகை மூலம் துருக்கி அதிபரை அவமதித்த பெண் அதிகாரிக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

துருக்கியில் உள்ள இஷ்மிர் நகரை சேர்ந்த பெண் பிலிஷ் அகின்சி. இவர் ஒரு பொருளாதார நிபுணர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2014–ம் ஆண்டு துருக்கியில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

அதில், அந்நாட்டு அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் பிரசாரத்தில் ஈடுபட்டார். இவரது பிரசார வாகனம் இஷ்மிர் நகரை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அகின்சி அவரை நோக்கி தனது கைகளால் ஆபாச சைகை காட்டி அவதூறு செய்தார்.

எனவே கைது செய்யப்பட்டு, அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது நான் குற்றம் எதுவும் செய்யவில்லை என அகின்சி மறுத்து வந்தார். ஆனால் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கோர்ட்டு அறிவித்தது.

எனவே, அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.38 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது. அவர் செய்த குற்றத்துக்கு 6 மாதம்தான் தண்டனை விதிக்க முடியும். ஆனால் இவர் அரசு அதிகாரி என்பதால் இரு மடங்காக தண்டனை வழங்கப்பட்டது.

இதற்கிடையே தீர்ப்பு வாசிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்ட போது பிலிஷ் அகின்சி கண்ணீர் விட்டு கதறி அழுதார். 

No comments

Powered by Blogger.