Header Ads



மைத்திரியும், ரணிலும் நீர்கொழும்பு செல்கிறார்கள்

(எம்.இஸட்.ஷாஜஹான்)

 ஜனாதிபதி, பிரதமர் பங்குபற்றும் கம்பஹா மாவட்ட  'தேசிய தைப்பொங்கல் விழா' நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில்

கம்பஹா மாவட்டத்தின் சார்பில்  'தேசிய தைப்பொங்கல் விழா'; நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் எதிர்வரும் 22.01.2016 வெள்ளிக்கிழமை  காலை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாக கலந்து  சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் பிரதமர் ரனில் விக்ரமசிங்க , முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள 12 பாடசாலைகளில் ஒவ்வொரு பாடசாலைகளிலிருந்தும் 52 மாணவர்கள் , ஆசிரியர்கள், பெற்றார் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

சர்வமத தலைவர்கள் பிரதேச கல்விமான்கள் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்க உள்ளதாக கல்லூரி அதிபர் என்.புவனேஸ்வரராஜா தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.