எம்.பி. பதவி தாருங்கள் - கம்பஹா முஸ்லிம்கள் கோரிக்கை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று மஹர தேர்தல் தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் முஹமட் அலி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த வேண்டுகோளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்புத் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் உயிர் பீடத்தின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாக என மஹர தேர்தல் தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் முஹமட் அலி விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளார்
அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்
இம்மாவட்டத்திலுள்ள கணிமாளவு மக்கள் ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வருகின்றனர். ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக நிறுத்தப்படுகின்ற மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் அவர்கள் கூடுதலான வாக்குகளைப் பெற்று வந்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சாபி ரஹிம் ஐக்கிய தேசியக் கட்சி அணியுடன் வேட்பாளராக சேர்ந்து போட்டியிட்ட போது 23122 விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தவர். அவர் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட போது 33746 விருப்பு வாக்குகளைப் பெற்றவர்.
சாபி ரஹீம் நடைபெற்ற அனைத்து மாகாண சபைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியுறாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் பிரதிநிதித்துவத்தைக் காத்து வரும் ஒருவர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் உயர் பீடம் நியாயமாகச் சிந்தித்து கம்பஹா மாவட்ட முஸ்லிம் மக்களுடைய அபிவிருத்தி நலனைக் கருத்திற் கொண்டு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சாபி சஹீமுக்கு வழங்குதே பொறுத்தமானதாக அமையும். இந்த மாவட்டத்தில் தான் முஸ்லிம்கள் பலகைக் கொட்டில் வாழ்க்கை முறையில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மக்களின் விடுதலைக்காகவும் சுவிட்சமான வாழ்வுக்காகவும் இந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை களுத்துறை மாவட்டத்திற்குப் பிற்பாடு கம்பஹா மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இம்மாவட்டத்திற்கு தேசியப் பட்டியில் பாராளுமன்றப் பிரதிநித்துவம் இதுவரை வழங்கப்பட வில்லை. ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும் இம்மாவட்டம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதால் இப்பிரதேச மக்கள் விரக்தியுற்ற நிலையில் உள்ளனர். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொண்டவர்கள் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிவைக்காமமையினால் அவர்கள் இன்று மக்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள்.
களுத்துறை, புத்தளம், குருநாகல். கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை , அம்பாறை உள்ளிட்ட ஆகிய மாவட்டங்களுக்கு இந்த தேசியப் பட்டியல் பராளுமன்றப் பிரதிநிதித்துவம் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளன. எனினும் கம்பஹா மாவட்டத்திலுள்;ள காங்கிரஸ் ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்துவற்காகவோ இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியின் தேவையை கருத்திற் கொண்டோ இதுவரை காலமும் ஒரு பாராளுமன்றம் பிரதிநித்துவம் வழங்கப்பட வில்லை. வடக்கு கிழக்கு வெளியே மிகவும் பாராளுமன்ற பிரதிநித்துவம் அதிகம் தேவைப்பாடுடைய பகுதியாக கம்பஹா மாவட்டமே முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே தேசியப் பட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை சாபி ரஹிமுக்கு வழங்க வேண்டும் என்று மஹர தேர்தல் தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் முஹமட் அலி விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு மேலும் சுட்டிக்காட்டிகாட்டப்பட்டுள்ளது.
இக்பால் அலி
Post a Comment