அமெரிக்காவில் இலங்கையர் ஏற்படுத்தியுள்ள, வித்தியாசமான கின்னஸ் சாதனை
அரை மரதன் ஓட்டப் போட்டியை அலுவலர் ஆடையணிந்த நிலையில் ஓடி முடித்து அமெரிக்காவை தளமாகக் கொண்ட இலங்கையர் ஒருவர் அண்மையில் கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
கிஹான அமரசிறிவர்த்தன என்ற பொறியியல்துறையில் பயிற்றப்பட்ட ஒருவராக ஆடையக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட அவிட்டார் 2 என்ற அலுவலக ஆடையை அணிந்த வண்ணம் அவர் அரை மரதனை ஓடி முடித்து சாதனை படைத்துள்ளார்
அரை மரதன் என்பது மரதன் ஓட்டப் போட்டியின் அரைவாசி தூரமாகும். அதாவது 21 கிலோமீற்றர் தூரமாகும்.
ஏற்கனவே அலுவலக ஆடையணிந்த நிலையில் கனடாவின்; நிக்கலோஸ் மிஸெரா என்பவர் கடந்த வருடம்,1 மணித்தியாலம் 35நிமிடங்கள் 47 வினாடிகளில் ஓடி முடித்து அரை மரதனின் கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியிருந்தார்
இதனை கிஹான் அமரசிறிவர்த்தன 1 மணித்தியாலம் 24 நிமிடங்கள் 41 வினாடிகளில் ஓடி முடித்து கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்க பொஸ்டனில் இருந்து தமது சாதனை ஓட்டத்தை கிஹான் ஆரம்பித்த போது பலரும் அவர் அலுவலக பஸ்சுக்காக அவசரமாக ஓடுவதாகவே கருதினர்.
எனினும் அவர் கின்னஸ் சாதனையை முறியடித்த போது அங்கு கூடியிருந்தோர், கிஹானை பார்த்து நீங்கள் இன்று அலுவலகத்துக்கு சுணங்கி வந்துவிட்டீர்களா? என்று வினவியதாக பாஸ்ட் கொம்பனி; டொட் கொம் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Post a Comment