Header Ads



இலங்கை பெண்களிடமிருந்து, பேஸ்புக் தொடர்பாக அதிக முறைப்பாடுகள்

கடந்த 2015ஆம் ஆண்டு பேஸ்புக் தொடர்பான 2,800 முறைப்பாடுகள் பெண்களிடமிருந்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவின் தகவல் பாதுகாப்பு அதிகாரி ரொசான் சந்ரகுப்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்து இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் தமது புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி பேஸ்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, அவை தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தே இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பேஸ்புக் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் 011-2691692 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.