பாகிஸ்தான் செய்த உதவிகளை நானும், நாட்டு மக்களும் மறக்கமாட்டோம் - மைத்திரி
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வருகை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
மேலும், யுத்தத்தின் போது இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் அதிகளவான உதவிகளை வழங்கியதாக நினைவூட்டிய ஜனாதிபதி அதை தாமும் தமது நாட்டு மக்களும் மறக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையின் போது பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டமையையும் ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்தார்.
தேசிய மற்றும் சர்வதேச உறவுகளை பாகிஸ்தானுடன் மேற்கொள்வதில் தாம் பெருமையடைவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பாகிஸ்தான் நாட்டு மக்களும், பாகிஸ்தான் அரசாங்கமும் எமது நாட்டிற்கு சிறந்த நண்பர்கள் என தெரிவித்தார்.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தம் நோக்கில் இரண்டு நாடுகளுக்கிடையில் 8 உடன்படிக்கைகள் கைச்சாத்திட்டப்பட்டதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
"பாகிஸ்தான் முஸ்லிம் நாடு, அது இலங்கைக்கு எவ்வளவோ உதவியிருக்கிறது, அதனால் நீங்கள் எங்களுக்கு உதவுங்கள், கண்ணை மூடிக்கொண்டு தாருங்கள்" என்று கேட்கமாட்டோம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி அவர்களே...!
ReplyDeleteமாறாக, "நாங்களும் இந்த இலங்கையின் மைந்தர்கள், வெள்ளையர்களின் அடிமைத்தளத்திலிருந்து இந்த இலங்கையை மீட்ட போராளிகளின் பங்காளிகள், அவர்களின் வாரிசுகள், இலங்கையை (சர்வதேச வியாபாரங்கள் மூலமாக) முதன்முதலில் வளமாக்கியவர்கள், (வரி செலுத்தும்) பொருளாதாரத்தின் பங்காளிகள், இலங்கையின் ஒருமைப்பாட்டுக்காக அன்றும், இன்றும், என்றும் உழைத்தவர்கள், உழைப்பவர்கள்! எனவே உங்களைப்போல் எங்களுக்குள்ள உரிமைகளை நாங்களும் சுதந்திரமாக அனுபவிக்க இடமளியுங்கள்! என்றுதான் கேட்போம்!
மகிந்தவின் "ஆசியாவின் அதிசயம்" என்ற கற்பனா உலகம் இல்லாமல், உங்கள் "நல்லாட்சி" உண்மைஎன்றால்...நீங்கள் தருவீர்கள் என்று நம்புகிறோம்! நீங்கள் நேர்மையானவர் என்றால் உங்களது நீண்ட ஆயுளுக்கு இப்போதே பிரார்த்திக்கிறோம்!
ygfghbhy
ReplyDelete