Header Ads



லிபியாவில் உள்ள, இலங்கை தூதரகம் மூடப்படும்

யுத்தம் நடைபெற்று வருவதால், தூதரக சேவை அதிகாரிகள் லிபியா மற்றும் உகண்டா நாடுகளில் பணிப்புரிய விரும்புவதில்லை என்பதால், இந்நாடுகளில் உள்ள தூதரகங்களை மூட தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

யுத்தம் நடைபெற்று வரும் சிரியா, உகண்டா, ஈராக், லிபியா போன்ற நாடுகளுக்கு தூதரக சேவை செல்ல அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

எனினும் தொடர்ந்தும் அந்நாடுகளில் இலங்கை தூதரகங்கள் இயங்கி வருகின்றன.

ஈராக், இலங்கையுடன் நீண்டகாலமாக உறவுகளை கொண்டுள்ள நாடு என்பதால், அங்குள்ள தூதரகம் மூடப்படாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.