தேடப்படும் குற்றவாளி அனுப்பிய அழகான செல்பி - நன்றி தெரிவித்த பொலிஸ்
ஒருவர் தான் செய்த குற்றத்திற்காக அவமானமாக உணர்வதாக கூற கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த டோனால்ட் புக் என்ற 45 நபர் தேடப்படும் குற்றவாளிகள் விளம்பரத்தில் தனது படம் மோசமாக இருப்பதால் அவமானம் அடைந்ததாக கூறியுள்ளார்.
டோனால்ட் புக் என்ற அந்த நபர் தீவைப்பு மற்றும் பொது சொத்துகளை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஓஹியோ மாகாணத்தின் லிமா நகர போலீசால் தேடப்பட்டு வருகிறார். லிமா நகர போலீஸ் சமீபத்தில் தேடப்படும் குற்றவாளிகள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டது.
போலீஸ் வெளியிட்ட தனது புகைப்படத்தை பார்த்த டோனால்ட் புக் கடும் அதிர்ச்சியடைந்தார். அந்த புகைப்படத்தில் தன் முகம் மிகவும் மோசமாக, கோரமாக இருப்பதாக நினைத்த அவர், தனது காரில் அமர்ந்தபடி ஒரு அழகான செல்பியை எடுத்து போலீசுக்கு அனுப்பியுள்ளார்.
டோனால்ட் புக் அனுப்பிய புகைப்படத்தை ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்துள்ள போலீஸ், அவரை நேரில் வந்து ஆஜர் ஆகும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
Post a Comment