கடலுணவு பற்றிய, இஸ்லாத்தின் நிலைப்பாடு...!
-Samoon Sayadu Ramalan-
பிஸ்மில்லாஹ்...
கடலுணவு பற்றி பொதுவாக தெளிவில்லாத நிலை காணப்படுகிறது. இஸ்லாம் சுத்தம் மற்றும் உணவு தொடர்பாக இரு வேறு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அவற்றை நாம் குர்ஆன் , ஹதீஸ் வசனங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
"(முஃமின்களே!) உங்களுக்கும் கடற் பயணிகளுக்கும் உணவுக்குப் பயன்படும் பொருட்டு, கடலில் வேட்டையாடுவதும் கடலுணவும் உங்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் நிலைஇல் தரையில் வேட்டையாடுவது ஹராமாக்கப்பட்டுள்ளது." அல்குர்ஆன் 5:95
"கடல் நீர் சுத்தமானது. அதில் (உள்ள உயிரினங்கள் ) செத்தவையானாலும் ஹலால் ஆகும் " என நபி ( ஸல்) குறிப்பிட்டார்கள். புகாரி, முஸ்லிம், ஷாபிஈ, ஏனய ஹதீஸ் அறிஞர்களும் இந்த ஹதீஸை அறிவிக்கின்றனர்.
இந்த இரு ஆதாரங்களும் கடல் மற்றும் தரை பற்றி பின்னரும் விடயங்களை கற்றுத்தருகின்றன.
1). இஹ்ராம் நிலையில் உள்ளவர் தரையில் வேட்டையாட முடியாது. ஆனால், கடலில் வேட்டையாடலாம்.
2). கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் உண்பதற்கு ஹலாலாக்கப் பட்துள்ளன. ஆனால், தரை வாழ் உயிரினங்கள் அனைத்தும் ஹலாலாக்கப்படவில்லை.
3). கடலில் தானாகச் செத்தவை ஹலால். ஆனால், தரைவாழ் உயிரினங்களில் தானா இறந்தவை ஹலால் வகை உயிரினமாக இருந்தாலும் ஹராமாகும்.
4). கடல்வாழ் உயிரினங்களுக்கு தப்ஹ் கடமை இல்லை. ஆனால், தரை வாழ் உயிரினங்களுக்கு தப்ஹ் கடமையாகும்.
5) கடல் நீர் எப்போதும் சுத்தமானது. ஆனால், தரை நீர் அவ்வாறல்ல.
எனவே, கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் ஹலால் என்பதே அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்களது நிலைப்பாடாகும். இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களைத் தவிர.
ஆனாலும் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் எவரும் கடலுணவு பற்றி ஹராம் என்ற நிலைப்பாட்டைக் கொள்ளவில்லை. ஆனால், ஷீஆ கொள்கை அறிஞர்கள்தான் கடலுணவு சம்பந்தமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாக்களுக்கு எதிரானவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
கடல் வாழ் உயிரினங்களில் விஷத்தன்மை கொண்டவை உண்பதற்கு அநுமதிக்கப்படவில்லை. ஆயினும் அவற்றை ஏனய பயன்பாட்டை அடையலாம்.
அடுத்து நண்டு மக்ரூஹ் என்றொரு கருத்து சமூகத்தில் காணப்படுகிறது. இது குர்ஆன் வசனத்திற்கும் ஸஹீஹான ஹதீஸுக்கும் முரணான நிலைப்பாடாகும்.
இதில் ஒரு பிரிவாக 'மக்ரூஹ்' என்றொண்டு உள்ளதா என்ற கருத்தும் நிலவுகின்றது.
ஹராம் நிலையை அடையாத தடைகள் மக்ருஹ் ஆகும். பர்ழு என்ற நிலையை அடையாத ஏவல்கள் ஸுன்னா என்பது போல.
நபியவர்கள் காலத்தில் வார்த்தையால் இப்பாகுபாடு இல்லாவிட்டாலும் செயல்வடிவில் காணப்பட்டன.
காலவோட்டத்தில் இஸ்லாமிய சட்டத்துறையின்(பிக்ஹ்) வளர்ச்சிக்கட்டம் பரழு, வாஜிப், ஸுன்னா, முஸ்தஹப், மன்தூப், ஹலால், ஹராம், மக்ரூஹ் என ஏவல்களும் விலக்கல்களும் வகைப்படுத்தப்பட்டன.
#அல்லாஹ்வே மிக அறிந்தவன்#
கடலில் வாழும் அனைத்தும் ஹலால் என்பது அதாவது நீரிலிருந்து வெளியில் வந்தால் இறக்கக்கூடிய விலங்குகள் அனைத்தும். நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவைகள் தானாக இறந்தால் ஹலாலாக முடியாது என்பதே எனது நிலைப்பாடு. உதாரணமாக கடலாமை, அவை நீரிலும் வாழும் நிலத்திலும் வாழும். மற்றது மீனின் இரத்தம் இரத்தபின்னும் வடிந்தோடக்கூடியது.
ReplyDeleteமற்றது உடலுக்கு தீங்கு விளைவிக்கூடிய அனைத்தும் ஹராமாகும். ( வயிறு முட்ட சாப்பிடுவதும் அவ்வாறுதான்)
ஆனால் மனிதனின் உயிர் உணவு இல்லாமல் ஊசலாடும் நிலையிலிருந்தால் அந்த நேரத்தில் வேறு ஒன்றுமில்லாமல் பன்றி இறைச்சி மாத்திரம் தான் உள்ளது என்றிருந்தால் அதுவும் அவனுக்கு ஹலாலானதே!
மனித உயிரைவிட வேறெதுவும் மேல் இல்லை என்பதே இஸ்லாத்தின் கருத்து.
In Islam there is only Halal & Haram....There is nothing in Islam like Makrooh..etc....
ReplyDeletePlease do not mix Farlu & Sunnah with Halal, Haram & Makrooh.
Farlu & Sunnah and Haram-Halal are acknowledged by our beloved prophet (PBUH)...Do not mix wrong things with Islamic fundamentalism.
Seyad ramlan article sea foodhalal at all he did not soeak about pork.
ReplyDeletejaffna muslim is not a place to judge this issue.if u need , go to your aalims. and fallow.diffrent oppenions ( sunnas) are there.
ReplyDelete