Header Ads



மன்/புத்/ ஐயூப் முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் நிர்க்கதி..!

மன்/புத்/ ஐயூப் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையானது வட மாகாண சபைக்குக் கீழ் இயங்குகின்ற புத்தளம் மாவட்டம் கல்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையாகும். இப் பாடசாலை 01-09 வரையிலான வகுப்புக்களைக் கொண்டதாகும். இதிலே சுமார் 650 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்க 26 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் இப் பாடசாலையிலிருந்து ஒன்பதாம் தரம் சித்தியடைந்து 10ம் தரத்திற்கான கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ள 35 ற்கும் அதிகமான மாணவர்கள் கல்/அல் அக்ஸா தேசிய பாடசாலைக்குச் செல்கின்றது வழமையாகும்.

என்றாலும் இவ்வருடம் மன்/புத்/ ஐயூப் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இருந்து 10ம் தரத்திற்காக கல்/அல் அக்ஸா தேசிய பாடசாலைக்குச் செல்லவிருந்த 36 மாணவர்களையும் சேர்த்துக் கொள்வதிலே ஒரு தயக்க நிலையினை கல்/அல் அக்ஸா தேசிய பாடசாலையின் நிருவாகம் காட்டி வருகின்றமை வருந்தத் தக்க ஒரு விடயமாகும். 

இதற்கான காரணங்களை இந் நிருவாகம் ஒப்புவிக்கையில் இம்முறை தேசிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வெளி வந்திருக்கின்ற சுற்று நிரூபத்தின் பிரகாரம் உயர் தரத்திற்கும், தரம் 6 ற்கும் மாத்திரமே மாணவர்களை உள்வாங்க வேண்டும் எனவும் மாறாக மற்றைய வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதாக இருந்தால் கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பம் இட்ட அனுமதிக் கடிதம் பெறப்பட வேண்டும் எனவும், அவ்வாறு அனுமதிக் கடிதம் பெறப்பட்டாலும் கூட கல்/அல் அக்ஸா தேசிய பாடசாலையின் நிருவாகம் நடாத்துகின்ற தெரிவுப் பரீட்சைக்கு இம் 36 மாணவர்களும் முகம் கொடுத்து அப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் என்ற கண்டிப்பான உத்தரவையும் பிரப்பித்துள்ளது.

எனவே இன் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள 36 மாணவர்களுக்குமான தீர்வு இரண்டு முறைகளிலேயே வழங்கப்பட வேண்டும்.

01. இம் மாணவர்கள் கல்வி பயின்ற மன்/புத்/ ஐயூப் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 10ம் ,11ம் தரங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

02. கல்/அல் அக்ஸா தேசிய பாடசாலை நிருவாகம் இம் 36 மாணவர்களையும் 10ம் தரத்திற்காக அனுமதிக்க வேண்டும்.

இவ்விரண்டு வழிகளில் ஒன்று அவசரமாக நடைமுறைப் படுத்தப்படல் வேண்டும்.....

இம் 36 மாணவர்களின் எதிர் காலம் கல்வியோடு சிறப்பிக்க கை கொடுக்கப் போவது யார்????????

01. கல்/அல் அக்ஸா தேசிய பாடசாலையின் நிருவாகமா???

02. வட மாகாண சபையா???

03. வன்னி மாவட்ட பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களா???

04. கல்வி அமைச்சா???

இதற்கான தீர்வு அவசரமாய் எட்டப்படும் வரை உண்ணிப்பாய் அவதானித்துக் கொண்டே இருப்போம்..!


No comments

Powered by Blogger.