Header Ads



மஹிந்த அரசு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்தது, மைத்திரியையும் தாக்கிய சந்திரிக்கா

யுத்தமொன்றை முடிவுக்குக் கொண்டு வந்தவுடன் அமைதி என்பது தானாக ஏற்பட மாட்டாது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தின் தைப் பொங்கல் விழாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கண்டி, கன்னொருவ ரோயல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய சந்திரிக்கா குமாரதுங்க,

யுத்தமொன்று முடிவுக்கு வந்தவுடன் தானாக ஏற்படும் அமைதி தற்காலிகமானது. அதனை நிரந்தர அமைதியாக மாற்றிக் கொள்வது அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பொறுத்துள்ளது.

கடந்த காலங்களில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் சிங்களவர்கள் பெரும்பான்மையினர் என்று கூறிக் கொண்டு ஏனைய இனங்களின் உரிமைகளை கொடுக்காமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் அவ்வாறு உரிமைகளை தடுத்தது மாத்திரமன்றி, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அவர்கள் புதிய கட்சியொன்றை உருவாக்கி மீண்டும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

ஆனால் இதுவரை அவர்கள் சுதந்திரக் கட்சியை விட்டு விலகவில்லை. எனினும் நான் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்திருந்தால் இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. அம்மனியும் ஆட்ச்சில் இர்க்கும் போது கடைசியாக அஸ்ரப்f (அல்லாஹ் இர்ஹம்)அவர்களையும் நல்லா கவனித்து அனுப்பினார்கள்

    ReplyDelete
  2. மாமிக்கு ஞானம் இப் பாெ ழுது தான் வந்துள்ளது.தலைவர் அஷ்ரப் உடைய விபத்தை நடத்தியது யார்? அதற்கான விஷாரணை தான் நடந்ததா? தமிழ் முஸ்லீம்கள் கட்டாயம் சிங்களம் கற்றுக் காெ ள்ள வேண்டும் என்று சாெ ன்ன மாமிக்கு ஏன் தமிழ் கற்றுக் காெ ள்ள முடிய வில்லை.எனக்கில்லை உபதேசம் ஊருக்கு மட்டும் தானா?

    ReplyDelete

Powered by Blogger.