ஒரு எம்.பி. பதவிக்கு வெற்றிடம், எத்தனை பேர் போட்டி தெரியுமா..?
மறைந்த அமைச்சர் ஏம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தனவின் பதவியை, ஜனநாயகக் கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் முதற்கட்ட நகர்வாக ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டு, இரு கட்சிகளும் இணைந்து பணியாற்ற கலந்துரையாடல்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லாட்சி அரசில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனுபவம் மிக்கவர்கள் யாரும் இல்லாத காரணத்தினால், குறித்த தேசிய பட்டியல் ஆசனத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கி, அவருடைய சேவையை நாட்டுக்கு பெற்றுக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தீர்மானித்துள்ளதாக ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும் குறித்த ஆசனம் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டவர்களான, கிஷாந்த குரே. அர்வின் வீரக்கொடி மற்றும் சுரனிமல ராஜபக்ஷ ஆகியோரில் ஒருவருக்கே வழங்கப்படுவது நியாயமானது என கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் தலைவருக்கு அறிவித்துள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிகின்றன.
அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியும் குறித்த ஆசனம் தனக்கு வழங்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளதோடு, அது தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட உயர்மட்ட உறுப்பினர்கள், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயகவுக்கு குறித்த ஆசனம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த உபுல் சாந்த சன்னச்கலவின் ஆதரவாளர்களும் வெற்றிடமாகியுள்ள தேசிய பட்டியல் உறுப்பினர் ஆசனைத்தை இலக்குவைத்துள்ளனர்.
இந்நிலையில், மறைந்த அமைச்சர் ஏம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தியே ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டதாக தெரிவித்துள்ள சதுர சேனாநாயக, குறித்த ஆசனம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரான ரெஜினோட் குரேக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ராஜித சேனாரத்ன மற்றும் எஸ்.பி திசாநாயக ஆகியோரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்படி குறித்த ஆசனத்தை குறித்த கட்சியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த ஒருவருக்கோ அல்லது குறித்த கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவருக்கோ மாத்திரமே வழங்க முடியும், அதை விடுத்து வெளியோருவருக்கு வழங்க முடியாது.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் வேண்டப்பட்டவரான ஐ.தே.க. இளைஞர் முன்னணியின் தவிசாளரும், பணிப்பாளருமான சட்டத்தரணி எரந்த வெலியங்கவுக்கு குறித்த ஆசனத்தை வழங்குவது தொடர்பிலும் கட்சியின் தலைவர் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அரசாங்கத்தில் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச முதலாவதாக பாராளுமன்றுக்கு தேசிய பட்டியல் ஊடாக வருகை தந்தபோது, அவருடைய பெயர் அக்கட்சியின் தேசிய பட்டியலில் காணப்படவில்லை.
அதன் அடிப்படையில் சட்டத்தரணி எரந்த வெலியங்கவின் பெயரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் இல்லை என்பதற்காக, அவரை நியமிப்பத்தில் சட்டப்பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது என எரந்த வெலியங்கவின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும் தன்னுடைய பெயர் வெற்றிடமாகியுள்ள தேசிய பட்டியல் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை எனவும், தனக்கு அந்த பதவியை பெற்றுக்கொள்ள எந்தவித தேவையும் இல்லை எனவும் சட்டத்தரணி எரந்த வெலியங்க நேற்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.
எது எப்படியோ, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பெயரிடப்படும் போது, தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தேசிய பட்டியல் ஊடாக சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டது என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆணித்தரமாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதைத்தான் செத்தவன் வாயில் மண்ணாம் இருப்பவன் வாயினில் சோறாம் என்பது மரணத்தின் பயம் மரணவீட்டோடு முடிந்துவிட்டது [சத்தியத்தின் சோதனைக்கு எததனை பேர் போட்டி தர்மம் எனைவாட்டுதம்மா சொந்தங்களைக்காட்டி....]
ReplyDelete