யோஷித்த கைதின் போது, ஹம்பாந்தோட்டையில் சமல் ராஜபக்ஸவுடன் இருந்த மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சந்தகிரிசேய விகாரையின் புனரமைக்கப்பட்ட தூபி திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
இன்று காலை கொழும்பு-05 பொலிஸ் மைதானம் அருகில் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்டோருடன் ஹம்பாந்தோட்டைக்குப் புறப்பட முன்னரே யோசித்த உள்ளிட்டோரின் கைது தொடர்பில் ஜனாதிபதி உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடற்படை தலைமையகத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்த யோசித்தவை கடற்படை சட்டதிட்டங்களின் பிரகாரம் கைது செய்ய முடியாது என்று ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினரை அவ்விடத்துக்குச் செல்லுமாறும், யோசித்தவை கைது செய்யுமாறும் ஜனாதிபதி தொலைபேசி வழியாக உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் போது அமைச்சர் மஹிந்த அமரவீர ஜனாதிபதிக்குப் பக்கத்தில் இருந்துள்ளார்.
இதற்கு முன்னதாக தனக்குக் கிடைத்திருந்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இன்று யோசித்த கைது செய்யப்படுவார் என்பது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஒருவர் நாமல் ராஜபக்ஷவைத் தொடர்பு கொண்டு அறிவித்துள்ளார்.
இவர் முன்னர் பிரதி சபாநாயகர் ஒருவரின் ஊடகச் செயலாளராகவும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்தவின் சமூக வலைத்தள பிரச்சார பிரிவின் பிரதானியாகவும் செயற்பட்டிருந்ததாக அறியக் கிடைத்துள்ளது.
யோசித்த கைது செய்யப்படுவது உறுதி என்றும், கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படுவார் என்றும் குறித்த அதிகாரி நாமல் ராஜபக்ஷவிற்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து மாத்தளை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு தகவல் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது தாயாருடன் நேரடியாக கடுவலை நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தபோது அவரது சார்பாக சட்டத்தரணிகள் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவிற்கு வருகை தந்திருந்தனர். ஆனால் யோசித்த சார்பில் சட்டத்தரணிகள் பொலிஸ் தலைமையகத்துக்கு வருகை தராத காரணம் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து கிடைத்த தகவல் என்றும் தெரிய வந்துள்ளது.
யோசித்த விவகாரம் கொழும்பில் பரபரப்பாக அரங்கேறிக்கொண்டிருக்க இன்று காலை கொழும்பு பொலிஸ் மைதானத்தில் இருந்து ஹெலிகொப்டர் ஏறிய மைத்திரி தரப்பு ஹம்பாந்தோட்டை சந்தகிரி சேய விகாரையின் புனரமைக்கப்பட்ட தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
அங்கு நடைபெற்ற விசேட வழிபாடுகளில் ஜனாதிபதி மைத்திரி, அமைச்சர்களான சஜித், அகில விராஜ் காரியவசம், மஹிந்தஅமரவீர ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
அதுமாத்திரமன்றி இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பரபரப்புக்கு மத்தியில் கொழும்பு திரும்பி வருவதற்கு விமானப்படை ஹெலிகொப்டரை பயன்படுத்த மைத்திரி தயங்கியதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
The judicial did it's duty well. Again he will be in the prison for wasim murder
ReplyDelete