Header Ads



ஜமாத் இ இஸ்லாமி தலைவரின், மரண தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்

வங்கதேசத்தின் மிகப் பெரிய இஸ்லாமியவாதக் கட்சியின் தலைவரான மோத்தியுர் ரஹ்மான் நிஸாமிக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னாள் நாட்டின் விடுதலை யுத்தம் நடந்த நேரத்தில் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக அவர் மீது குற்றம் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதிசெய்துவிட்ட நிலையில், தனது தீர்ப்பை மீளாய்வு செய்யச்சொல்லி உச்சநீதிமன்றத்திடம் மனுச்செய்வது, அதில் பலனில்லாத பட்சத்தில் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு முறையிடுவது ஆகிய இரண்டு வழிகளே நிஸாமிக்கு மீதமுள்ளன.

கடந்த ஆண்டு அவருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்த நேரத்தில், அவருடைய ஜமாத் இ இஸ்லமி கட்சி நாடுதழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தது.

போர்க் குற்றம் உறுதிசெய்யப்பட்ட வேறு இரண்டு எதிர்க் கட்சித் தலைவர்களுக்கு கடந்த நவம்பரில் தூக்கிலிடப்பட்டிருந்தனர்.

விடுதலைப் போராட்ட காலத்து போர்க் குற்றங்களுக்காக இதுவரை நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.