பரஸ்பரம் கடும் குற்றச்சாட்டு
முன்னாள் இராணு வதளபதி சரத்பொன்சேகாவும்,நீதியமைச்சர் விஜயதாசராஜபக்சவும் கொழும்பின் தொலைக்காட்சியொன்றின் அரசியல்விவாத நிகழ்ச்சியொன்றின் போது பரஸ்பரம் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
நீதியமைச்சர் விஜயதாசா ராஜபக்ச இன்னமும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புசெயலாளர் ஆகியோரின் நலன்களிற்கு சேவையாற்றி வருகின்றார். இதனால் ஜனாதிபதியும் பிரதமரும் அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் இராணுவதளபதி இந்த நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார், நீதியமைச்சர் பல வருடங்களிற்கு முன்னர் ஐக்கியதேசிய கட்சியில் இணைந்துகொண்ட போதிலும் அவர் தொடர்ந்தும் மகிந்தராஜபக்சவிற்கும்,அவரது அரசாங்கத்தை சேர்ந்தவர்களிற்கும் விசுவாசமாக செயற்பட்டுவந்தார். நீதியமைச்சர் மிகவும்இலாபகரமான சர்ச்சைக்குரிய வர்த்தகசெயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்,வர்த்தக நலன்களிற்காக தனது பதவியை பயன்படுத்துகின்றார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
முன்னர் அவன்ட்கார்டே நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகளை தற்போது மகாராஜாநிறுவனம் முன்னெடுக்கின்றது என நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்களிற்காக அவரைகடுமையாக சாடினார் முன்னாள் இராணுவதளபதி.
பின்னர் தொலைபேசியூடாக நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துகொண்ட நீதியமைச்சர் முன்னாள் இராணுவதளபதியை கடுமையாக சாடினார். தனது மருமகனின் தாயாரின் வங்கிபாதுகாப்பு பெட்டகத்திலிருந்து எடுக்கப்பட்ட88.8 மில்லியனை மீளவழங்குவதற்கு தான் இன்னமும் நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே முன்னாள் இராணுவதளபதி தன்மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார் என தெரிவித்த நீதியமைச்சர்,பொன்சேகா இராணுவதளபதியாக செயற்பட்ட காலத்தில் சட்டவிரோதமாக சேர்த்ததே அந்த பணம் அதனால் அதனை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.
முன்னாள் பாதுகாப்புசெயலாளரை கைதுசெய்யுமாறு பொன்சேகாவிடுத்த வேண்டுகோளை நான் ஏற்றுக்கொள்ளாததன் காரணமாகவும் அவர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார் எனவும் நீதியமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment