ஓரினச் சேர்க்கை மோகம் - வீடுகளைவிட்டு ஓடிய மாணவியும், யுவதியும் கைது
ஓரினச் சேர்க்கை மோகத்தில் வீடுகளை விட்டு ஓடிச் சென்ற பாடசாலை மாணவி ஒருவரையும், யுவதி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரும், 20 வயதான யுவதி ஒருவருமே இவ்வாறு அவிசாவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்னர்.
அண்மையில் அவிசாவளை பஸ் நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவர் பற்றி, அருகாமையில் இருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இருவரும் ஓரினச் சேர்க்கையில் நாட்டம் கொண்டு நட்பு கொண்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பெற்றோர் விரும்பாத காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறியதாக பாடசாலை மாணவியும் யுவதியும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இந்த இருவரையும் அவிசாவளை பொலிஸார் மீரிகம பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
சில செய்திகளை வெளியிடுவதாலும் இதில் உள்ள பெறுபேறுகளை இளம் சமுதாயம் உற்றுநோற்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் வாய்ப்பு வரலாம் ஆகவே இவ்வாறான செய்திகளை இந்த தளத்தில் பதிவிடாமல் இருப்பது நல்லது
ReplyDeleteI think JN should avoid publishing this sought of news. This may indirectly promote such activities.
ReplyDeleteYes
ReplyDeleteஎன்னம்மா இப்படி பன்ரீங்கலேம்மா.......
ReplyDeleteI think it should avoidable news. some time it promote such activities. Plz remove it
ReplyDeleteமுற்றிலும் உளவியல் ரீதியாக அணுகப்பட வேண்டிய பிரச்சினை இது!
ReplyDeleteஅதேவேளை, பின்னூட்டம் எழுதி முதலைக்கண்ணீர் உகுக்கும் நண்பர்களே உங்களில் இதுவரை பாலியல் பாவமே புரியாதவர்கள் யாருமிருந்தால் அவர்கள் முதல் கல்லை இவர்கள் மீது வீசி எறியட்டும்!
ஜஜ நினைத்து கொண்டார் இங்கு பின்னூட்டம் எழுதுபவர்கள் பாலியல் குற்றம் செய்தவர்கள் என்றோ?முதலில் இவர் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும் நேரடியாக எதையல்லாம் பார்க்க ஹராமோ அதை எல்லாம் புகைப்படமாகவோ தொலைக்காட்சி மூலமாகவோ பார்ப்பது ஹராம்தான் இவர் இங்கு தன்னுடைய அல்லது வேறு ஒரு பெண்களுடைய புகைப்படம் இட்டுள்ளார் இதை எத்தனை ஆண்கள் பார்க்க கூடும் இதையும் கவனிக்க வேண்டாமா?
ReplyDeleteமனதில் அத்தனை உறுதியிருந்தால் ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பற்றி உமக்கேன் கவலை..?
ReplyDeleteமின்விளக்குக் கம்பத்தில் ஒரு துணி சுற்றிக்கொண்டிருந்தாலும் அதைப்பார்த்து ஜொள்ளு வடிக்கும் (தெருநாய்களையொத்த) கேவலமான ஆண்கள்தான் பெண்களுக்கு காவலர்கள் போல வேடமிடுவதும் அதுபற்றி பினாத்திக்கொண்டிருப்பதும் அதிகம்.