Header Ads



எல்ரீரீஈ. பயங்கரவாதிகளை சித்தாந்த ரீதியாக தோல்வியடையச் செய்ய புதிய அரசு பாடுபடுகிறது - ஜனாதிபதி

யுத்த ரீதியில் தோல்வியடைந்த பயங்கரவாதிகளை சித்தாந்த ரீதியாக தோல்வியடையச் செய்யும் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு புதிய அரசு பாடுபடுகிறது  – ஜனாதிபதி

2009 மே மாதம் 18ஆம் திகதி எல்ரீரீஈ. பயங்கரவாதம் யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்டபோதும் இந்த நாட்டில் தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான அவர்களது சித்தாந்தம் தோற்கடிக்கப்படவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் யுத்த ரீதியில் தோல்வியடைந்த பயங்கரவாதிகளை சித்தாந்த ரீதியாக தோல்வியடையச் செய்யும் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு புதிய அரசு பாடுபடுகிறது என தெரிவித்தார்.

இப்பொறுப்பினை உரியவாறு நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்வேளைஇ நாட்டின் தேசிய பாதுகாப்பினை வலுவிழக்கச் செய்து இராணுவ வீரர்களை பலவீனமடையச் செய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக சிலர் குற்றம் சுமத்துவதாகத் தெரிவித்த ஜனாதிபதி  தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளின்போது குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்டவர்களின் குற்றச்சாட்டுக்களை அரசு வன்மையாக நிராகரிப்பதாக தெரிவித்தார்.

அத்திடிய மிஹிந்து செத் மெதுறவில் நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகம் நேற்று (19) பிற்பகல் இராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். இராணுவ வீரர்கள் தாம் பிறந்த நாட்டுக்காக மேற்கொண்ட சேவைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக 15 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளுடன் இந் நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு ஒருபோதும் தேசிய பாதுகாப்பிற்கான தனது பொறுப்பினை புறந்தள்ளுவதற்கோ தாமதப்படுத்துவதற்கோ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்இ இதனை முன்னரிலும் பார்க்க மிகவும் வலுவான முறையில் நடைமுறைப்படுத்துவது தனது நோக்கமாக உள்ளதெனக் குறிப்பிட்டார்.

நாட்டுக்கு வெளியே உள்ள எல்ரீரீஈ. பயங்கரவாதிகள் காணும் ஈழநாடு தொடர்பான கனவினை உடைத்தெறிவதற்கு சர்வதேசத்தின் சகலவிதமான ஒத்துழைப்புக்களும் இன்று இலங்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்இ தாய் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும்இ ஒருமைப்பாட்டிற்கு சவால் விடுக்கும் நாட்டுக்கு வெளியில் இருந்து செயற்படும் சகலவிதமான செயற்பாடுகளையும் இல்லாதொழிப்பதற்கு புதிய அரசு பாடுபடுவதாகத் தெரிவித்தார். 

யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் சில சம்பவங்கள் காரணமாக இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சி சந்தர்ப்பங்கள்இ தொழில்நுட்ப உதவிகள் ஆகியவற்றை பெரும்பாலான உலக நாடுகள் நிறுத்தியுள்ளதுடன்இ தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபின் அந்நாட்டு அரச தலைவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ்வாய்ப்புக்கள் மீண்டும் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இதன்போது ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தவிர்த்து நாட்டில் நிலையான சமாதானத்தை நிலவச் செய்வதே அன்று யுத்த களத்தில் உயிரை தியாகம் செய்தஇ உடல் உறுப்புக்களை இழந்த அனைத்து இராணுவ வீரர்களுக்காகவும் அரசினால் வழங்கப்படும் அதி உயர்ந்த பாராட்டாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 

இதன்போது இராணுவ வீர்ர்களுக்காக காணி உறுதிகள்இ பகுதியளவு பூர்த்தியடைந்த வீட்டு உரிமைப்பத்திரங்கள் ஆகியவற்றை ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார். மிஹிந்து செத் மதுறவில் மேற்பார்வை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள்இ உடலுறுப்புக்களை இழந்த இராணுவ வீர்ர்களிடம்  நலன் விசாரித்தார். 

பாதுகாப்பு  அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிஇ பாதுகாப்பு பதவி நிலை பிரதானிஇ இராணுவத் தளபதிஇ கடற்படை தளபதி உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016.01.20

No comments

Powered by Blogger.