Header Ads



பொங்கியெழுந்த றிசாத், அடங்கினார் மங்கள - தீர்மானத்தை கைவிட்டது அமைச்சரவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை மேற்கொள்ளும் கலந்தாய்வின் போது, பக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பொங்கியெழுந்துள்ள அமைச்சர் றிசாத் அதற்கு பலமான எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

 இதுகுறித்து ஆராய்ந்ததில் jaffna muslim இணையத்திற்கு கிடைத்த மேலதிக தகவல்கள் வருமாறு,

பயங்கரவாத புலிகளை அழிப்பதில் முஸ்லிம் நாடுகள் வழங்கிய மாபெரும் பங்களிப்பை இதன்போது ஞாபகமூட்டிய றிசாத், தேயிலை ஏற்றுமதியில் ஈராக் முக்கிய நாடென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மாவீரர் சதாம் ஹசைன் இலங்கைக்கு வழங்கியுள்ள உதவிகளையும் குறிப்பிட்டுச் சொன்ன அமைச்சர் றிசாத், அப்படியென்றால் இலங்கையில் இஸ்ரேல் தூதரகத்தையா திறக்கப்போகிறீர்கள: என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் பக்தாத்திலுள்ள இலங்கைத் தூரகத்தை ஒருபோதும் மூடலாகாது எனவும் வலியுறுத்தி, தனது எதிர்ப்பையும் மீறி பக்தாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்படுவதற்கு அமைச்சுரவை அனுமதி வழங்குமாயின்,  குறித்த அமைச்சரவை தீர்மானத்தில் றிசாத் பதியுதீனின் எதிர்ப்புடன்தான் பக்தாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்படுகிறது என்ற குறிப்பும் உள்ளடங்க வேண்டும் என வாதிட்டு  அப்போதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் முஸ்லிம் விரோதப் போக்கை இந்நாட்டு முஸ்லிம்களும் உலக முஸ்லிம்களும் கண்டு கொள்வார்கள் என ஆத்திரமாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அமைச்சர்களான ராஜித்த சேனாரத்தினா, தலதா அத்துக்கோரள, அநுர பிரியதர்சன யாப்பா, பைசர் முஸ்தபா ஆகியோரும் றிசாத்திற்கு ஆதரவாக குரல்கொடுத்து அவருடன் இணைந்துள்ளனர்.

பக்தாத்தில் உள்ள இலங்கைத் துதரகம் மூடப்பட வேண்டுமென அமைச்சரவைக்கு யோசனை சமர்ப்பித்த மங்கள சமரவீரவுக்கு ஆதரவாக, அமைச்சர் நவீன் திசாநாயக்கா உள்ளிட்ட சிலரும் வாதிட்டுள்ளனர்.

 றிசாத் எழுப்பிய எதிர்ப்பினால் அமைச்சரவை இரண்டாவதை உணர்ந்த மைத்திரிபால சிறிசேனா, ரணில் ஆகியோர் உடனடியாக தலையிட்டு பக்தாத்தில் உள்ள இலங்கைத் துதரகத்தை தற்போதைக்கு மூடுவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளதாக jaffna muslim இணையத்திற்கு அறியவருகிறது

12 comments:

  1. இது முற்றிலும் உண்மையான ஒரு தகவலாக இருக்கும் பட்சத்தில் நல்லதோர் ஆரம்பம் என்றே கருதமுடியும்.

    இப்போதுதானே 'பவர் ப்ளே' ஆட்டம் முடிந்திருக்கின்றது. இன்னும் ஐந்து பத்து ஓவர்கள் போகட்டும் பார்க்கலாம்!

    ReplyDelete
  2. do not praise toooooooo much
    praise be to Allah

    ReplyDelete
  3. Actually saying what is the purpose of having Embassy in Iraq at this juncture? The Embassy can be re-opened, when the situation becomes normal. Why he is making big fuss on that?

    ReplyDelete
  4. I totally agree with Kumar on this subject! நாட்டுல எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. முதலில் அதற்கு என்ன தீர்வுகளை மேற்கொள்ளலாம் என்பதை யோசிங்கப்பா!!

    ReplyDelete
  5. Kumar, first you must know Embassy of Sri Lanka in Baghdad is functioning at present. Only Minister Rishard Baduyudeen visited Iraq in Year 2013. So that he knows it was re-opened in 2012. Otherwise who will take care about about 5000 Sri Lankans working in Iraqi cities such as Erbil,Sulaymaniyah.Kirkuk, Duhuk, Baghdad, Basra, Karbala and Hella.

    ReplyDelete
  6. ஈராக்கில் வசிக்கும் சுமார் 5000 இலங்கையர்களது நலன்களைக் கவனிப்பது யார்? இதற்குப் பதில் தான் இலங்கை தூதரகத்தின் தேவை. அமைச்சர் றிஷாட் 2013 இல் விஜயம் செய்தபடியால் அவருக்கு தெரியும் எமது இலங்கையரது தேவையும்,இலங்கையின் வர்த்தக தேவையும்.எதையும் அழிப்பது இழகு, உருவாக்குவது கடினம். ஏற்கனவே இயங்கிவரும் வரும் தூதரகத்தை மூடுவது உசிதமானது அல்ல.

    ReplyDelete
  7. Enter your comment... It is correct. It' may be not important matter for some people.

    ReplyDelete
  8. @ Rizab. Minister Rishard would have visited Baghdad in 2013. But now in 2016 things have changed. Iraq is facing high threat from ISIS. I am doubt about 5000 Sri Lankan's still working at the cities mentioned by you. If it is true they should consider returning back for their safety.

    ReplyDelete
  9. You do not think Iraq just like Sri Lanka. Iraq is having big Markets for Sri Lankan Tea, Gems,Flowers,fruits like Pineapple, Papaya,Rambuttan, Leather products. Also hundred of Iraqis visiting Sri Lanka as Tourist each year.
    Also Iraq consist of 18 Provinces.problems in Syrian border cities called Anbar, Diyala,Salahuddin,Tikirit.
    But most of the Sri Lankans are in Kurdistan Region. There are in peaceful environment just like Europe. Sri Lankans are happy to work in Erbil and Sulaymaniyah district of Kurdistan where Kurdi and English is main languages. In Iraq there are seven International Airports in Baghdad, Basra, Najaf, Erbil, Sulaymaniyah, Duhuk and Kirkuk where most of the Sri Lankans are working as Airport Securities and Airport Hotel staff such as Chef, Chief Accountants, Receptionist.Also in Five Star hotels such as Divan, Sheraton, Babylon, Rotana as room boys, chef, Accountant and HR staff. Further in Kurdistan housemaids and Garbage Collectors, Airport cleaners are among them. My question is who will take care about this Sri Lankans if there is Police arrest, dispute between Employee and Employer,even death who will send dead body to Sri Lanka?, who will issue Death Certificate ? who will renew Passport of Sri Lankan Employees. Think............... Answer is need for a Embassy.

    ReplyDelete

Powered by Blogger.