Header Ads



கரக்கப்பட்ட பால் குடத்தின் மீது, சாணம் இட்டு மாசுபடுத்திய ஹிருனிகா - ரஞ்சன்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்யாமை வெட்கம் கெட்ட செயலாகும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹிருனிகாவிற்கு தொடர்பு உண்டு என்பது முழு நாட்டுக்கும் தெரியும். எனினும், ஹிருனிகாவை கைது செய்ய பொலிஸார் அஞ்சுகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் கரக்கப்பட்ட பால் குடத்தின் மீது ஹிருனிகா சாணம் இட்டு மாசுபடுத்தியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்க நாம் அரும்பாடுபட்டோம்.

அன்று அரசியல் மேடைகளில் வெள்ளை வான்களுக்கு எதிராக குரல் கொடுத்த ஹிருனிகா, ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கறுப்பு டிபென்டர்களில் ஆட்களை கடத்துகின்றார்.

இது பிழையான விடயம். பிழை செய்திருந்தால் ரஞ்சன் ராமநாயக்கவையும் கைது செய்ய வேண்டும். இந்த கடத்தலை சாதரண ஒருவர் செய்திருந்தால் தற்போது சிறையில் இருந்திருப்பார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அரசியல்வாதிகளைக் கண்டு பொலிஸார் அஞ்சினர். அந்த அச்சம் இன்னமும் தொடர்கின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அப்படி நடக்க வாய்ப்பு கிடையாது.

குற்றம் செய்திருந்தால் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பேதம் பாராட்டாது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் நாம் கஸ்டப்பட்டு உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

ஹிருனிகாவின் பாதுகாவலர்கள் குறித்த நபரை கடத்திச் சென்றதனை முழு நாடும் சீ.சீ.ரீ.வி. ஊடாக பார்வையிட்டனர்.

ஹிருனிகா அச்சுறுத்தியுள்ளார். சிறுமியொருவர் இது குறித்து நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

எனினும், பொலிஸார் கூறுகின்றார்கள் போதிய சாட்சியங்கள் இன்றி ஹிருனிகாவை கைது செய்ய முடியாது என, இது ஓர் வெட்கம் கெட்ட செயலாகும் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹிருனிகா ஏன் கைது செய்யப்படவில்லை என கொழும்பு பத்திரிகையொன்று ரஞ்சன் ராமநாயக்கவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.