சிங்களே ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு, வாகனத்தில் செல்லுவோர் மிருகங்களேயாகும் - சிசிர விதானகே
இனவாதத்தை தூண்டும் வகையிலான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டுமென ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றியத்தின் தலைவர் சிசிர சீ.விதானகே கோரியுள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களிலும் சிங்களே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கம் நிச்சயமாக கவனம் செலுத்த வேண்டும்.
போரின் பாதிப்புக்களை அறிந்திராத பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. குறுகிய இனவாத நோக்கங்ககளின் அடிப்படையிலும் மீளவும் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
இவ்வாறான பிரச்சாரங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே இரத்தமே ஓடுகின்றது. இவ்வாறான ஸ்டிக்கர் மூலம் இரத்தத்தில் இன வகையீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இனவாதத்தை தூண்டும் சிங்களே அமைப்பிற்கு எதிராக மனுச லே (மனித இரத்தம்) என்ற பெயரில் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். சிங்களே ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வாகனத்தில் செல்லுவோர் மிருகங்களேயாகும்.
அவ்வாறானவர்களுக்கு அவசர தேவை ஏற்படும் போது வேறும் இனத்தவர்கள் இரத்தம் வழங்கும் பல சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்ட முடியும்.
ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையில் தொடர்ச்சியாக போராட நேரிடும் என சிசிர கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Let be supportive of theses type of leaders and organisations.
ReplyDelete