'முஸ்லிம் இரத்தம்' உருவெடுக்கும் அபாயம் - சுஜீவ சேனசிங்க
நாடு பூராகவும் 'சிங்ஹ லே' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கருக்கு பதிலாக இன்னும் சில நாட்களில் 'தமிழ் லே', 'முஸ்லிம் லே' (முஸ்லிம் இரத்தம்) என இன ரீதியாக தனித்தனி ஸ்டிக்கர்கள் உருவெடுக்கும் அபாயம் உள்ளது.
இது இன நல்லிணக்கத்திற்கு பெரும் பாதிப்பாகும். இத்தகைய இனவாத செயலால் நாட்டை அழித்தொழிக்கமுனைய வேண்டாம் என சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கோரினார்.
நல்லாட்சிக்கு எதிராக் கறுப்புக் கொடிகளை தொங்கவிட முனையும் கூட்டு எதிரணியின் முகத்தை கறுப்புத் துணியால் மூடி மறைக்க வேண்டும் . போதாவிடின் வாயையும் கறுப்பு துணியால் கட்டி வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்
'அபயராம கும்பல்' என்ற கூட்டு எதிரணியினரின் 750 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆகவே இவை பொது மக்களுக்கு சொந்தமானவை. இதனை மீளவும் நாட்டுக்கு எடுத்து வருவதற்கு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு மேலும் இராஜங்க அமைச்சர் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது நாட்டில் அடாவடித்தனம் தலைவிரித்தாடியது. சர்வாதிகார ஆட்சி இலங்கையில் நிலவியது. இதன்போது அனைவர் வாய்களும் மூடப்பட்டிருந்தன. கூட்டு எதிரணி என்ற 'அபயராம கும்பல்' தற்போது நல்லாட்சியைப் பற்றி பேசுகின்றனர். குறித்த தரப்பினரால் வெளிநாட்டு வங்கிகளில் 750 பில்லியன் அமெரிக்க டொலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது சுயாதீன நீதித்துறையை நிறுவியுள்ளோம். அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டபோது எதிர்ப்பதற்கு எவரும் இருக்கவில்லை. முன்பு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது அனைத்து திட்டங்களுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் கையொப்பம் வேண்டும்.
இதனை எதிர்ப்பதற்கும் எவரும் இருக்கவில்லை. அப்போது கூட்டு எதிரணியினர் மெளனிகளாக இருந்தனர். ஆனால் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தினால் சாதனை நிகழ்த்தப்படும் போது பொறாமையின் எதிரொலியாக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
முன்னைய ஆட்சியின் முகாமைத்துவமற்ற , ஊழல் மிகுந்த போக்கினால் 1200 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது.
மேலும் தற்போது கூட்டு எதிரணியினர் மீளவும் இனவாதத்தை துண்டுகின்றனர். நாடுபூராகவும் 'சிங்ஹலே' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிகர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன. இதனால் சில நாட்களில் தனித்தனியாக இன ரீதியாக ஸ்டிகர்கள் ஒட்டப்படும். இது இன நல்லிணக்கத்திற்கு பெரும் பாதிப்பாகும். இத்தகைய செயற்பாடுகளினால் நாட்டை அழித்தொழிக்க வேண்டாம் .
பொது மக்களுடைய பணத்தைகளை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்து கறுப்பு கொடிகளை தொங்கவிட முனையும் கூட்டு எதிரணியின் முகத்தை கறுப்புத் துணியால் மூடி மறைக்க வேண்டும் . போதாவிடின் வாயையும் கறுப்பு துணியால் மூட வேண்டும் என்றார்.
ப்பா 750 பில்லயொன்ஸ் அமெரிக்க டோலோரா?அப்படினா110 லட்சம் கோடி இவ்வளவு பணம் இலங்கைல இருந்தால் உலகத்திலே இலங்கைதான் பணக்கார நாடு !!!
ReplyDeleteமா ரக லே முன்னமே உருவாகியது இன்னும் இவர்களுக்கு புரியவில்லை போலிருக்கு !
ReplyDeleteசெய்தியாளர்களின் வேலை செய்திகளை தெரிவிப்பது.
ReplyDeleteபிரஜைகளான நமது வேலை செய்தியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அறிவிப்பது.
செய்திகளை விசாரித்து எமக்காக செயற்பட்டு தீர்மானங்கள் எடுத்து திட்டங்களை அமுல் படுத்துவதுதானே பாராளுமன்ற உறுப்பினரின் வேலை.
இலங்கையில் அரசியல்வாதிகள் நாம் சொல்ல வேண்டியதை இவர்கள் சொல்கிறார்கள்.(செய்திகள், கதைகள், கட்டுக்கதைகள்,அவதூறுகள்,நகைச்சுவைகள்)
நாம் வாக்களித்து ஆட்சிகளை மற்றிக்கொண்டிருக்கிறோம். மாறிமாறி இவர்கள் வந்து செய்வதெல்லாம் செய்திகள், கதைகள், கட்டுக்கதைகள், அவதூறுகள், நகைச்சுவைகள்.
அட! எல்லா 'லே' யும் சிவப்புத்தான்லே!
ReplyDelete