மன்னிப்பு கேட்டார் சந்திரிக்கா
நாட்டில் பல மோசடிகள் இல்லாமல் செய்யப்பட்டு, நல்லாட்சியை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இன்று இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் மக்கள் ஆட்சி முறை ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தினை எதிர்ப்பவர்கள் கொலை செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் நீதிமன்றம் சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான வழியேற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தன்னுடைய அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சில விடயங்கள் கடந்த அரசாங்கத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவே, நாட்டில் பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்திருந்ததாக குறிப்பிட்ட அவர், கடந்த அரசாங்க ஆட்சியாளர்கள் அரச துறையினை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் இனவாதம் பேசும் சிலர் இருப்பதாக கூறிய அவர் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் இணைந்து தானும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தனக்கு தமிழ் மொழியில் உரையாற்ற முடியாமல் போனமை வருத்தமளிப்பதாகவும் அதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க சபையில் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் அமைச்சர்களான மனோ கணேஷன், அகிலவிராஜ் காரிவசம் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment