Header Ads



குடிநீர் விநியோகத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார் ரவூப் ஹக்கீம்

(எம்.எம்.ஜபீர்)

மத்தியமுகாம் பிரதேசத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிநீர் வினியோகத்திட்டம் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜே.என்.கரீம் தலைமையில் இன்று நடைபெற்றது.

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான  பிரதம அதிதியாக கலந்துகொண்டு குடிநீர் இணைப்பினை ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது மத்தியமுகாம் நகரிலுள்ள மூவின வழிபாட்டுத்தலமான  முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல், ஸ்ரீமுருகன் ஆலயம், லும்மினி விகாரை ஆகியவற்றில்  குடிநீர் வினியோகத்திட்டம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துடன் நிர்வாக நடவடிக்கைக்கு அலுவலக கட்டிடமும் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப்சம்சுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரகுமத் மன்சூர், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.