அகில இலங்கை மக்கள் காங்கிரசின், உயர்பீட உறுப்பினராக முபாறக் மௌலவி
தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்ற விமானப்படை தளபதியின் கூற்று வரவேற்கப்பட கூடியதாகவும், சில இனவாதிகளின் கூற்றை பொய்யாக்கியுமுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் உலமா கட்சி தலைவருமான முபாறக் மௌலவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த போது,
அண்மைக்காலமாக நாட்டின் இனங்களுக்கிடையில் சந்தேகத்தை ஏற்படுத்துமுகமாக கரையோரங்களில் வாழும் முஸ்லிம் தமிழர்களால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை அ இ மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் அமைச்சர் ரிசாதி பதியுதீனுடனான தொலைக்காட்சி விவாதத்தில் ஆனந்த சாகர என்ற தேரரும் தெரிவித்திருந்தார். அதற்கு அமைச்சர் ரிசாத் தெளிவாக பதிலளித்ததுடன் கரையோர முஸ்லிம்களே ஒல்லாந்தர் காலம் முதல் போராடி நாட்டை காத்தவர்கள் என தெளிவு படுத்தியிருந்தார்.
ஆனாலும் சில இனவாதிகள் மீண்டும் மீண்டும் இக்குற்றச்சாட்டை ஊடகங்களில் தெரிவித்து வந்த நிலையில் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்த பின்னர் கருத்து கூறிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத் சிங்கள் மேற்படி குற்றச்சாட்டை மறுத்து தேசிய பாதுகாப்புக்கு எத்தகைய அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு விடையத்தில் அதுவும் கரையோர பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பு டொல்லக்கூடிய தளபதியின் இக்கருத்து உண்மை என்பதை எவரும் மறுக்க முடியாது. எனவே இனவாதிகள் இதற்குப்பின் இவ்வாறான பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து இங்களுக்கிடையில் வீணான சந்தேகங்களை உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
தனித்தனியாக அரிக்கைகள் விடாமல் இவ்வாரு ஒன்ருபட்டு ஒருநோக்கத்திற்காக அரிக்கைகள் விடுங்கள் அதிலும் முஸ்லீம்தலமைகலுக்கு எதிர்மரையான விடயங்கலை குரைத்து செயல்படுவது நல்லது இல்லாவிட்டால் அடைய நினைக்கும் இலக்கு ரெம்பதூரமாகும்.....
ReplyDeleteஅண்மையில் இவரின் ஆதரவு அஇமகா இருந்து வந்தது இப்போது புரிந்துவிட்டது
ReplyDeleteஇதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா!
ReplyDeleteIthu maattelimpaa or aaatelumpaaa
ReplyDelete