ஈரான் மீதான சர்வதேச தடை நீக்கம் - இலங்கைக்கு மிகப்பெரும் சாதகம்..!
ஈரானிடமிருந்து மசகு எண்ணெயை மீண்டும் இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சுமட்ட உறுப்பினர்களிடம் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் அகற்றப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள அவர், ஈரான் மீதான தடைகள் காரணமாக அண்மைக்காலமாக மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் விற்பனை செய்யப்படும் விலைக்கு அமைவாக, ஈரானிடமிருந்து எண்ணெய்யை பெற்றுக் கொள்ளமுடியுமாயின் அது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் மசகு எண்ணெய்க்கான விலைச்சுட்டெண் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்வதால், அதன்மூலம் கிடைக்கும் இலாபத்தை நாட்டு மக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கம்! எரிபொருள் விலை மீண்டும் குறைவடையலாம்!
ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளன.
அணு ஆராய்ச்சிகளை நிறுத்தவும், தங்கள் நாட்டு அணு ஆராய்ச்சி மையங்களில் சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிக்கவும் ஈரான் ஒப்புக் கொண்டதை அடுத்தே அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவுத் தலைவர் ஃபெடரிகா மொகெரினி, வியன்னாவில் அறிக்கை வெளியிட்டார்.
அதில், "ஈரானின் அணு ஆராய்ச்சி தொடர்பாக ஏற்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை அந்த நாடு பின்பற்றுவது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார, நிதி தடைகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத் தடை நீக்கப்பட்டதை அடுத்து, கச்சா எண்ணெய் விற்பனை உள்ளிட்ட சர்வதேச வர்த்தகத்தில் ஈரான் மீண்டும் ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகம் மூலம் ஏற்கனவே பெறப்பட்ட 10 ஆயிரம் கோடி டொலர் (சுமார் 15.6 இலட்சம் கோடி இலங்கை ரூபா) அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் சர்வதேச வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டது.
தற்போது ஈரான் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இனி, ஈரானும் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் என்பதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் அளிப்பு அதிகரிக்கும். எனவே, பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை குறையும்.

Post a Comment