"அல்லாஹ் எனக்கு நல்ல கண்களை தருவான், எனக்காக துஆ செய்யுங்கள்..."
-மு.மு.மீ-
அல்லாஹ் எனக்கு மறுமையில் நல் வாழ்வை தருவான் : கண் கலங்க வைத்த சகோதரர்.....!!
இந்த படத்தில் காணக்கூடிய சகோதரர் நம்மை திகைக்க வைத்து நம்முடைய கண்களை கலங்க வைத்து விட்டார்.
இந்த சகோதரர் அழகாகவும் இருக்கிறார். மென்மையான பேச்சையும் கொண்டவராக இருக்கிறார்.
இந்த சகோதரர் அணிந்துள்ள கண்ணாடியை கூர்ந்து கவனியுங்கள், அந்த கண்ணாடியின் மேலே இரண்டு கிளிப் தெரிகிறதா ?
இதுப்போன்ற கிளிப் உள்ள கண்ணாடியை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்த கண்ணாடியை அணிந்துள்ள இந்த சகோதரரும் இதுப்போன்ற கண்ணாடியை எங்கும் பார்த்ததில்லை என்றார்.
ஏன் இப்படிப்பட்ட கிளிப் உள்ள கண்ணாடியை அணிந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு....
அவர் சொன்ன பதில் நம்மை திகைக்க வைத்து விட்டது.
என்னுடைய கண்கள் எப்போதும் மூடியே இருக்கும், தானாக புருவம் உயராது, எனது கைகளால் மட்டுமே புருவத்தை உயர்த்த இயலும்,
நானும் உங்களை போன்று உலகத்தை பார்ப்பதற்காக இந்த கிளிப்பை வைத்து எனது கண்களை திறந்தே வைத்துள்ளேன். அவ்வாறு திறந்து வைத்துள்ள கண்களில் தூசி விழும்போது புருவம் தானாக மூடாது என்பதால் கண்ணாடி அணிந்துள்ளேன் என்றார்.
இவர் சொன்னவுடன் திகைத்து நின்றோம்.
இந்த உலகத்தில் எனது கண்கள் இவ்வாறு இருந்தாலும் மறுமையில் அல்லாஹ் எனக்கு நல்ல கண்களை தருவான் எனக்காக துஆ செய்யுங்கள் என்றார்.
குறிப்பு : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் TNTJ கிளையில் இவர், இவருடைய மனைவி, இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரும் சமீபத்தில் இஸ்லாத்தை தழுவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Alhamdulilla , May Allah grant him the best place in heaven.and we have more and more lessons to practice from his speach.
ReplyDeleteவெள்ளீக்கிழமை நாளான இன்ரு செய்திபடித்தபோது நானும் கண்கலங்கிபோனேன் நிட்சயமாக அல்லாஹ் உங்கள் தேவைகலை நிரைவேற்றீதருவான் நானும் இன்ரையநாளீல் துஆச்செய்துகொள்கின்ரேன்...
ReplyDeleteAameen
ReplyDeleteAameen
ReplyDelete