இஸ்லாமிய அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில், அகதிகள் மீது மிளகுத் தாக்குதல் - பிரதமர் கண்டனம்
கனடா நாட்டில் புகலிடம் கோரி வந்துள்ள சிரியா அகதிகள் மீது நபர் ஒருவர் மிளகாய் தூளை வீசிய நபரின் செயலுக்கு அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
புகலிடம் கோரி வந்துள்ள சிரியா அகதிகளை அன்புடன் வரவேற்கும் உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை வான்கூவர் நகரை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிரியா அகதிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
அப்போது, அப்பகுதி வழியாக சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென அகதிகள் மீது மிளகாய் தூளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
அகதி குழந்தைகள் உள்பட ஆண்கள், பெண்கள் என 15 நபர்கள் மீது இந்த மிளகாய் தூள் வீசப்பட்டது.
இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த அகதிகள் அழுதுக்கொண்டும், இருமிக்கொண்டும் அங்கிருந்து அலறி ஓடியுள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அகதிகள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் டுவிட்டரில் இன்று கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
”ஆதரவு கோரி வந்துள்ள அகதிகள் மீது மிளகாய் தூளை வீசியது ஒரு உண்மையான கனேடிய குடிமகனிற்கு அடையாளம் அல்ல. அகதிகளை அன்புடன் வரவேற்கும் முறையும் இது இல்லை. இதனை தான் வன்மையாக கண்டிக்கிறேன்’’ என கருத்து தெரிவித்துள்ளார்.
கனேடிய குடியமர்வு அமைச்சரான John McCallum அவரும் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.
‘அகதிகள் மீது தாக்குதல் நடத்துவது கனடா நாட்டிற்கு இருக்கும் நன்மதிப்பை கெடுப்பதற்கு சமமானது. இந்த தாக்குதலை நடத்திய நபரை பொலிசார் விரைவில் கைது செய்வார்கள் என நம்புவதாக’ தெரிவித்துள்ளார்.
He is not a human. He is an animal like as srilanka's BBS
ReplyDelete