Header Ads



இறைச்சி விவகாரம் - இதோ மைத்திரி சொல்வதை கேளுங்கள் (வீடியோ)

நாட்டு மக்களிடம் சமாதானத்தையும் , நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு சட்டத்தினால் மட்டும் முடியாது என்றும் அதனை சமய தத்துவங்களுக்கேற்பவே மேற்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

நாட்டிலுள்ள சகல இனங்களுக்கு மத்தியிலும் அச்சம் சந்தேகத்தை இல்லாதொழித்து சமாதானத்தையூம் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முன்வருமாறு தாம் சகல சமயத் தலைவர்களிடமும் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

களுத்துறை –பயாகல இந்து கல்லூரியில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர், இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட பல அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது ஜனாதிபதியின் உரை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது ஜனாதிபதி, 'இறைச்சி சாப்பிடமாட்டேன்' என்ற போது, மொழி பெயர்ப்பாளரின் மொழிப் பெயர்ப்பு தொடர்பில் சிறிது குழப்பம் ஏற்பட்டது. 

காணொளியை பார்க்கவும்.... வீடியோ

9 comments:

  1. எனக்கு வந்த ஒரு forward message இது!!!

    மாடுகளைப் பாதுகாக்க மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
    இதுக்கு எமது சமூகம் அனாவசியமாக டென்ஷன் ஆகத் தேவையில்லை. எமக்கு மாட்டிறைச்சி உண்பது ஹாலால் ஆக்கப்பட்டுள்ளதே தவிர கட்டாயம்- வாஜிப் ஆக்கப்படவில்லை. இது இறைச்சியில்லாமல் வாழமுடியாத சமூகம் அல்ல.

    மாட்டிறைச்சியில் உள்ள சுகாதாரச் சிக்கல்கள், மாட்டு வியாபாரிகள் செய்யும் அனியாயங்கள் என்பவற்றைப் பார்க்கும் போது இத்தடையை நாங்கள் வரவேற்க வேண்டும்.
    அதுமட்டுமல்ல, மாடறுப்பைத் தடைசெய்வதால் அவதிப்படப்போவது எங்களை விட மாடுகளை வளர்த்து விற்கும் பெரும்பான்மையின விவசாயிகளாகும். அத்துடன் அது பொதுவாக சுற்றுலா, ஹோட்டல் துறைகளையும் நேரடியாகப் பாதிக்கும். எனவே இத்தடை சிறிது காலத்தில் தளர்த்தப்படவும் கூடும்.

    எனவே, நாங்கள் இதில் வீணாக அறிக்கை விடுவது, பேச்சுவார்த்தை நடத்துவது எல்லாம் தேவையில்லை. இந்த விடயத்திலாவது எமது சமூகம் React பண்ணாமல் இருக்குமா என்று பார்ப்போம்!!!

    ReplyDelete
  2. உண்மைதான் முஸ்லிம்களும்

    ReplyDelete
  3. br voic அவர்கலுக்கு இது சாதாரனவிடயமாக இருக்கலாம் காரனம் அவர்கலுக்கு மாட்டுஇரைச்சிதான் வேன்டுமென்ரில்லையே அதே நேரம் நமதுசமூகத்திற்கும் இரைச்சிதான் முக்கியமென்ரும் நான் கூரவரவில்லை நாட்டின் பலதசாப்தங்கள் கடந்தும் பல அரசியல் சாசனம் கொன்டுவரப்பட்டும் மாட்டின் உயிர்மேல் அக்கரை கொல்லா சமூகமாகவா இருந்தார்கள் இன்ரு மனித உயிருக்கே மதிப்பழிக்கா காலம் நெருங்கியதும் மாட்டின்மீது அக்கரைகொன்டுள்ளார்கள் என்ரால் அதுவும் துவசவாதங்கலை தாங்கிப்பிடிக்கும் தற்போதைய சூல்நிலையில் இதன் பின்னனியென்னவென முதலில் விழங்கிகொல்லவேன்டும் இதை சாதாரனமாக பார்த்தல் அடுத்த நகர்வு எதைநோக்கியோ என்பதனையும் ஞாபக்த்தில் கொல்லவேன்டும் நல்லாட்சியில் நடந்தது என்ன சேனாக்கலையும் வீரவன்சவையும் தாருமாராக பேசவிட்டதை தவிர பயனம் திசைமாரிக்கொன்டிருப்பதே உன்மை

    ReplyDelete
  4. Totally agree with VoiceSriLanka.
    Eating meat or having a meat stall is not an obligation in Religion.
    We can live without it of course a healthier life.
    This is not at all a Muslim issue.If any Muslim is voicing against this issue is not doing so on behalf of the Muslims or Islam. It can be politics or business motive.
    If slaughtering animals hurt other community, avoiding it is the best magnanimous option according to the Islam I have understood.

    ReplyDelete
  5. சகோ.voice கூறுவது சரியாக இருந்தாலும் இந்த இடத்தில் ஒரு விடயத்தை நாம் கவனத்தில் எடுக்க வேண்டியும் உள்ளது.இவ்வாறான சில விடயங்களை நாம் அபெசாமல் விட்டுக்கொடுப்பதால் எதிர்காலத்தில் நமக்கு மிக முக்கியமான விடயங்களிலும் கை வைக்க ஆரம்பித்தால் தடுப்பது கஷ்டமாக இருக்கும் இல்லை என்றால் இப்போதைய நிலையில் நம்மவர்கில் அதிக எடை உள்ளவர்கள் கொலஸ்ட்ரோல் உள்ளவர்கள் சீனி நோய் உள்ளவர்கள் என்று பல வகையிலும் கணிசமான முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்கள் என்பது பல நாள் உண்மை .

    ReplyDelete
  6. Mr.voice..if we stopped this how come we give udhiya as well qurbaan..they are well planning something against muslims...our b..trd politicians sleeping as allways.

    ReplyDelete
  7. @ Safraz Yes I do agree on that. Their intention may be to stop Qurban. Still its ok Since we can give Goat as Qurban. Allah is more wise and all knower.

    By banning the beaf, actually muslims are going to benefit more bro. because only muslims will import meat even if a non muslim import it no one will buy it from him.
    the other thing is we muslims only buy Cattles to slaughter, the cattle ranchers are Non Muslims so, after this they don't have no jobs, and they will not have any benefit from their cattle.
    Allah knows best.

    ReplyDelete
  8. அனைத்து ச‌ம‌ய‌மும் வெறுக்கும் சாராய‌த்தை த‌டை செய்யாம‌ல் மாட‌றுப்பை த‌டை செய்வ‌து ப‌ச்சையான‌ இன‌வாத‌ம். மாட்டிறைச்சியை விரும்பியோர் சாப்பிட‌லாம். க‌ட்டாய‌மில்லை. ஆனால் அது சுகாதார‌த்துக்கு கேடு என‌ சொல்லி த‌டை செய்ய‌ முய‌ல‌வில்லை. வெளிநாட்டிலிருந்து க‌ண் காணா இட‌த்திலிருந்து வ‌ருவ‌து சுகாதார‌மோ. இது ஒன்றுமில்லை. மோடியின் ஆட்சியை இல‌ங்கையில் கொண்டு வ‌ர இஸ்ரேல் அமெரிக்கா இந்த‌ அர‌சை ப‌ய‌ன்ப‌டுத்துகிற‌து.

    ReplyDelete

Powered by Blogger.