Header Ads



பௌத்த பிக்குகளை அரசு கட்டுப்படுத்தாது, ஒழுக்க விதிகளே முக்கியம்

பௌத்த பிக்குகளை அரசாங்கம் கட்டுப்படுத்தப் போவதில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (14) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று இதனைத் தெரிவித்துள்ளார்

பௌத்த பிக்குகளின் நடத்தை, ஒழுக்கம் மற்றும் ஒழுக்க மீறல்களில் ஈடுபட்டால் அதற்கான தண்டனை விதித்தல் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய உத்தேச சட்டமூலமொன்று நாடாளுமன்றில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மூன்று பீடங்களினதும் மஹாநாயக்க தேரர்களின் ஒப்புதலுடன் இந்த உத்தேச சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்த அரசாங்கம் சட்டம் இயற்றுவதாக சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.

பௌத்த பிக்குகளுக்கான ஒழுக்க விதிகளுக்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்கும் நோக்கில் இந்த உத்தேச சட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது.

இதுவும் பௌத்த பிக்குகளின் கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு உத்தேச சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மஹாநாயக்கத் தேரர்களுடன் பல்வேறு பேச்சுவார்த்தை சுற்றுக்களின் பின்னர் மஹாநாயக்க தேரர்களின் அனுமதியுடன் இந்த உத்தேச சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச சட்டத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருந்தால் குழுநிலை விவாதங்களின் போது அந்த திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும்.

இந்த உத்தே சட்டத்தை கடந்த அரசாங்கமே உருவாக்கியிருந்தது.

கடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய அரசாங்கம் இந்த உத்தேச சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.