"ஹக்கீம் - றிசாத் இணைவும், சின்னத்தனமான கருத்தும்"
அ. இ. மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ரவூஃப் ஹக்கீமுடன் இணைந்து செயற்படத்தயார் என கூறிய விடயத்தை அவரது கருத்தை முழுமையாக வாசிக்காமல் சிலர் அவரை விமர்சித்துள்ளமை அவர்களின் அரை குறை அறிவை காட்டுகிறது என அ இ மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் முபாறக் மௌலவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
அமைச்சர் ரிசாத் தனது கருத்தில் முஸ்லிம் சமூகத்தின் நலனை கருத்திற்கொண்டு முன்னாள் அமைச்சர் பேரியல், அதாவுள்ளா போன்றோருடனும் இணைந்து செயற்பட தயார் என சொன்னதன் மூலம் அவரது சமூகம் பற்றிய அக்கறையையும், முஸ்லிம் தலைவர்கள் இன்றைய இக்கட்டான நிலையில் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் சமூகத்துக்கான அரசியல் தீர்வில் இழுத்தடிக்கப்படலாம் என்ற அவரது தூர நோக்கையும் நாம் காண்கிறோம். இது பற்றி அவரது மேற்படி அறிக்கையில் மிக தெளிவாக இருக்க அவர் சமூக நன்மைக்காக இணைந்து செயற்படத்தயார் என சொல்லியிருப்பது அவரது சுயநலனுக்கென சொல்வது அறை குறை வாசிப்பை காட்டுகிறது.
அதே போல் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இத்தகைய அறிவிப்பு என்பது தேர்தல் தொகுதி வாரியாக வருமாயின் அவருக்கு போட்டியிட்டு வெல்லக்கூடிய தொகுதி இல்லாமை காரணமாகவே அமைச்சர் ஹக்கீமுடன் இணைந்து செயற்பட விரும்புகிறார் என்பது சின்னத்தனமான கருத்து மட்டுமல்ல புதிய தேர்தல் திருத்தம் பற்றிய அறியாமையுமாகும்.
உண்மையில் அமைச்சர் ரிசாத் முஸ்லிம் தமிழ் சிங்கள மக்களின் அபிமானத்தை வென்ற ஒரு தலைவர் என்பதால் அவரால் தனது தொகுதியில் வெல்ல முடியும். அத்துடன் தொகுதி முறையிலும் 30 வீதம் விகிதாசார முறையாகும் என்பதயும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் தொகுதிவாரி தேர்தல் முறை அமைச்சர் ரிசாதுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் ஹக்கீமுக்கே அவரது தொகுதியான கலகெதரவில் வெல்ல முடியாது என்பதே உண்மை. முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் கிழக்கு மாகாணத்தில் ஒருவருக்குஆட்டை போடுவதன் மூலமே ஹக்கீமால் பாராளுமன்றம் போக முடியும் என்பதே யதார்த்தமாகும்.
உண்மையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் சமகால முஸ்லிம்களின் நிலையை சரியாக கணக்கிட்டு இந்த நிலையில் முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு தீர்வுக்காக ஒத்துழைக்காவிட்டால் நாளைய தலை முறையின் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டி வரும் என்ற சமூக சிந்தனை காரணமாகவே அமைச்சர் ஹக்கீமுடன் சமூக நல்னுக்காக இணைந்து செயற்படத்தயார் என கூறியுள்ளார். அவரது கருத்தை சமூகம் பற்றிய அக்கறை கொண்ட அனைவரும் வர வேற்கிறோம்.
ஒட்டிக்கொண்டு பெயிண்ட் அடித்தால் உருவம் மறையாது காவலரே வேஷமிட்டால் கல்வர்களும் வேற்றுருவில் கண்முன்னே தோற்றுவது சாத்தியமாம்.....காத்திருந்து கல்வனுக்கு கைவிலங்கிட்டால் அதுதான் உன்மை......
ReplyDelete