Header Ads



எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது, கண்ணீர் விட்டு அழுதார் ஒபாமா

துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசும்போது அமெரிக்க அதிபர் ஒபாமா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் துப்பாக்கி சூட்டினால் பலியாகியுள்ளனர்.

எனவே இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிபர் ஒபாமா பொதுமக்களிடன் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2012ஆம் ஆண்டும் நியூடவுன் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் பலியானார்கள். அந்த குழந்தைகளை பற்றி நினைக்கும்போது எல்லாம் எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது என்று கூறிய அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர் தனது கண்ணீரை தொடைத்துக்கொண்டே, சிக்காக்கோ பகுதியில் இது போன்ற சம்பவம் தினமும் நடைபெறுகிறது என்று கூறினார்.

மேலும் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கை தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கிகளுக்கு கட்டுபாடு விதிக்கும் மசோதோவை நாடாளுமன்றம் தடுப்பதாக கூறப்படுகிறது.

எனவே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற அனுமதியில்லாமலேயே துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர ஒபாமா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


4 comments:

  1. கண்ணீர் வடிக்கின்றார். பாவம்...முதலைக் கண்ணீர்.... உலகத்தின் மிகப் பெரிய ஆயுத உற்பத்தி நாடு அமேரிக்கா.... எத்தனை உயிர்கள் அந்தக் குண்டுகள் குடைந்த துளைகளூடாக தினமும் பிரிகின்றன...?

    ReplyDelete
  2. ஹலோ மிஸ்டர் ஒபாமா இப்பதான் உங்க கண்களில் நீர் வருகிறதா? உலகில் உள்ள கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம் நாடுகளிலும் உங்கள் ஆயுதங்களினால் எத்தனை லெட்சம் குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என்ற வேறுபாடின்றி கொன்று குவிக்கப்பட்டிருக்கிறது அப்போதெல்லாம் உங்கள் கண்களில் வந்ததெல்லாம் மிகப் பெரிய சந்தோசம்! இப்போது உங்கள் மக்கள் கொல்லப்படுவதை மட்டும் உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை பைத்தியம் பிடிக்கிறது கண்ணீர் விட்டு அழுகிறீர்கள்..... உங்கள் மக்கள் மட்டும்தான் பொருமதியானவர்கள் முஸ்லிம்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரம் என்ன ? வினை விதைத்தவன் வினைதான் அருக்கனும்.

    ReplyDelete
  3. You are crying for only America. But you can destroy the Muslim world by your police & weapons power

    ReplyDelete
  4. good decision of president Obama

    ReplyDelete

Powered by Blogger.