Header Ads



ராஜிதவின் மகன், பிணையில் விடுதலை

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் சத்துர நேற்று ஆஜராகியிருந்தார்.

இந்த நிலையில் அவரை தலா இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டார்.

ராகம பிரதேசத்தில் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வழக்கில் சத்துர சேனாரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.