Header Ads



"இலங்கையில் மீண்டும் சிங்கள இனவாதம்" - முஸ்லிம்கள் பொலிஸில் முறைப்பாடு

இலங்கையில் மீண்டும் சிங்கள இனவாதம் தலை தூக்குகிறதா என்னும் அச்ச நிலை மேலோங்கி வருகின்றது.

இலங்கையில் தீவிர தேசியவாத பௌத்த குழுவாக நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ‘சிங்ஹல’ அமைப்பு தமது புதிய விளம்பரம் ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளது.

இதன்படி நுகேகொடையில் உள்ள முஸ்லிம் வீடுகளின் வாயிற்படிகளில் சிங்ஹல என்ற சொல் எழுதப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முஸ்லிம் மக்களுடன் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என்று பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த முஸ்லிம் குடும்பங்கள் பொலிஸில் முறைப்பாட்டை செய்துள்ளன.

சிங்ஹல அமைப்பு தமது பிரசாரத்தை முதலில் சமூக வலைத்தளங்களின் மூலம் மேற்கொண்டது. இந்தக்குழு பொதுபலசேனாவின் ஆதரவை பெற்ற அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆட்சிக்காலத்தில் பௌத்தத்தின் பெயரால் பல அட்டூழியங்கள் இந்த நாட்டில் நடைபெற்றதோடு, இனங்கள் பெறுமதியான உயிர்ச் சேதங்களையும் சந்தித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

9 comments:

  1. கட்டாரிலும் இவர்களின் இந்த Singhe Le கலாசாரத்தை தொடங்கியிருக்கிறார்கள் போலும். ஆனால் ஒட்டியவரின் விசாவை ரத்து செய்து உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என கேள்விபட்டேன். இத்தகவல் உண்மையா என்பது தெரியாது ஆனால் sticker ஒட்டபட்டிருந்த வாகனத்தின் போட்டோவுடன் இந்த நியூஸ் உம Whatsapp மூலமாக கிடைத்தது.

    மத்திய கிழக்கில் இருக்கும் அனைவரையும் திருப்பி அனுப்பினால், இவர்களுக்கு சாப்பிடவே வழியில்லாமல் போகும். முட்டாள்கள்.

    ReplyDelete
  2. சகோதரர்களே
    றகுமான் றகீம் மிக சாதுரியமான தீர்வை முன்மொழிந்துள்ளார்.
    இது திட்டமிட்ட செயற்பாடு.
    இதனை அவர்கள் வழியிலேயே எதிர்கொள்வதுதான் சிறந்தது.
    "சிங்ஹ லே" என சகலரும் தத்தமது வாகனங்களிலும் வீடுகளிலும் Stickers ஒட்டிக்கொண்டால் (உருவமற்ற) டீஷேட்களை அணிந்து கொண்டால் குளப்பம் ஏற்படுத்த எதிர்பார்ப்பவர்களுக்கு பலத்த(செருப்பு)அடியாகவிருக்கும்.
    மாறாக எதிர்ப்புகள் அவர்களது நோக்கத்தை நிறைவேற்றும்.

    ReplyDelete
    Replies
    1. Absolutely good idea which is say brother mannar muslim.

      Delete
  3. சிங்கத்தின் இரத்தம் இவர்களை மனித குலத்திலிருந்து வேறுபடுத்தி விலங்குகள் சரணாலயத்தில் அடைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலம் பாதுகாப்பாக வாழ முடியும்

    ReplyDelete
  4. Intha naatuku future illai

    ReplyDelete
  5. Dear Hon: President and
    Hon:prime minister
    This is kindly for your attention please.

    ReplyDelete
  6. Dear President!

    what happened to your declaration of "good governance week"?
    what is going on in practical? we muslims feel more uncomfortable right now and feel of more threat ahead (than in the past) because of your silence!!

    our dear Dr. Rajitha & Ex-Ex. Chandrika, where are you?
    please dont wait for harm at us to speak out!
    make the barrier before the flood!


    ReplyDelete
  7. நாட்டை பார்க்கும் போது மிகவும் மோசமான நிலைக்கிதான் போய்க்கொண்டிருக்கிறது அல்ல்ஹாதான் பாதுகாக்கணும்

    ReplyDelete
  8. mannar muslim

    Inavazigal thoppigalai aninthu pallivayilgalukkul nulainthaal
    enna seyveergal ? Neengal solvazu ponru indappirchchinaiyai anuga mudiyazu . Inavaazaththitku aazaravaaga ainthu million
    vaakkugal vilunthirukkinrana. Izuzaan pirachchinai ! Izai vaiththukkonduzaan intha naadaham arangerukirazu . Ivargalai
    nerukku ner shandikka intha arasu thayakkam kaatugirazu .
    Mahinda kudumbaththil eppozu intha arasu kai vaikkirazo appathan nilamaigal seeragath thodankum . Izu eppozu nadakkum ?

    ReplyDelete

Powered by Blogger.